‘எம்ஓ1’-இன் மனைவி யார் என்பதை ரோஸ்மா விளக்க வேண்டும்: சிலாங்கூர் பிரதிநிதி கோரிக்கை

djoபிரதமரின்  துணைவியார்   ரோஸ்மா   மன்சூர்,    அமெரிக்க     நீதித்துறை (டிஓஜே)   குறிப்பிடும்   “மலேசியாவின்   முதன்மை   அதிகாரி (எம்ஓ1)-இன்  துணைவி”   யார்   என்பதை   விளக்க   வேண்டும்   என்று    கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

டிஏஜே,    சொத்துப்  பறிமுதல்    தொடர்பாக   நேற்று     பதிவு   செய்த   ஒரு  வழக்கில்        “எம்ஓ1-இன்  மனைவிக்கு”  22-காரட்  இளஞ்சிவப்பு    வைரக்கல் பதக்கத்துக்காகவும்   கழுத்துச்   சங்கிலிக்காகவும்      குறைந்தது   யுஎஸ்27.3 மில்லியன்    செலவிடப்பட்டிருப்பதாகக்   கூறியிருந்தது.

பெயர்  குறிப்பிடாத   அந்நபர்    யார்   என்பதை    ரோஸ்மா  விளக்க  வேண்டும்   என   டமன்சாரா    உத்தாமா    சட்டமன்ற   உறுப்பினர்  இயோ   பீ  இன்  இன்று   ஓர்    அறிக்கையில்    கேட்டுக்கொண்டார்.

“பிரதமர்துறை   அமைச்சர்   அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்    எம்ஓ1  என்பது   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்தான்   என்பதை   ஒப்புக்கொண்டிருப்பதால் (த  ஸ்டார்   2016,   செப்டம்பர்  1)  “எம்ஓ1-இன்  மனைவி”   யார்  என்பதை   ஊகிப்பது   ஒன்றும்   கடினமல்ல.

“நேற்று    ஒரு   நிகழ்வில்    ரோஸ்மா    சமூக    வலைத்தளங்கள்   பரப்பும்   அவதூறுகளை   நம்ப   வேண்டாம்    என்று  மலேசியர்களைக்    கேட்டுக்கொண்டார்.

“டிஓஜே-இன்   குற்றச்சாட்டை   அப்படியே   மூடிமறைக்காமல்   டிஓஜே    தாக்கல்   செய்துள்ள   மனுவில்    குறிப்பிடப்பட்டிருக்கும்   ‘எம்ஓ1-இன்  மனைவி”   அவர்தானா   என்பதை   ரோஸ்மா   மலேசிய    மக்களுக்குச்   சொல்லியாக    வேண்டும்”,  என்று  இயோ   கூறினார்.