சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் பக்கத்தானின் பிரதமர் பதிவிக்கான வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பிகேஆரில் பலர் விரும்பினாலும், தாம் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இதன் நோக்கம் பொதுத்தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் யார் பிரதமராவது என்ற சச்சரவை நிறுத்தி விட்டு அடுத்தப் பொதுத்தேர்தலில் முழுக் கவனத்தையும் செலுத்த ஹரப்பானை ஊக்குவிப்பதாகும் என்றார் அவர்.
“கட்சியின் முழுக் கவனமும் பொதுத்தேர்தல் மீது இருக்க வேண்டும். ஆகவே, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிற்கப் போவதில்லை என்று நான் தீர்வுசெய்துள்ளேன்.
“இந்தப் பிணக்கு (யார் பிரதமர் ஆவது என்பது பற்றிய) எதிரணியைச் சோர்வடையச் செய்துள்ளது, இறுதி முடிவு பொதுத்தேர்தலில் மக்கள் கையில் இருக்கிறது”, என்று அன்வார் அவரது கட்சி வழியாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.