கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறார்.
அன்வார் இப்ராகிம், தாம் ஹராபானின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விரும்பவில்லை என்று அறிவித்து விட்டதை அடுத்து டான்-னுக்கு இவ்வார்வம் ஏற்பட்டுள்ளது.
“இப்போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் அவர்களின் புதிய தேர்வா?
“இத் தகவலை வாக்காளர்களிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை”, என்றவர் இன்று ஒர் அறிக்கையில் கூறினார்.
ஏனென்றால், இது “முக்கியமானதும் அடிப்படையுமான” ஒரு விவகாரம். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு அரசியல் கூட்டணியும் முடிவு செய்திருக்க வேண்டிய விவகாரம் என்றாரவர்.
“பிரதமர் வேட்பாளரைக் கூட முடிவு செய்ய இயலாத ஒரு கூட்டணி நாட்டை எப்படி ஆளப் போகிறது?”, என டான் வினவினார்.
அடடா என்ன கரிசனை பக்கத்தான் ஹரப்பான் மீது.நீங்களே அந்த பதவிக்கு போட்டியிடலாம்!