1எம்டிபி விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டா? இருந்தால் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே)யிடம் தாராளமாக வழக்கு தொடுக்கட்டும் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் கூறினார்.
மலேசிய முதன்மை அதிகாரி (எம்ஓ1)யின் பெயர் குறிப்பிடப்படாதது அவர் யார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறிய அவர், இப்போது எம்ஓ1-இன் மனைவியும் சேர்த்துப் பேசப்படுகிறார் என்றாரவர்.
இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஹிஷாமுடின், டிஓஜே வழக்கு தொடுக்கவில்லை என்றால் அதன் பெயர்தான் கெடும் என்றார்.
“நடவடிக்கை எடுக்காமல் அறிக்கைமேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வழக்குத் தொடுத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரூபிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும்”, என்றாரவர்.
கடந்த ஆண்டு பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், எம்ஓ1 என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறிக்கும் என்றார். ஆனால், அவர்மீது விசாரணை இல்லை என்பதால் பிரதமரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார்.
ஹிஷாம், எம்ஓ1 நஜிப்தானா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டார்.
“அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
“அதிகாரப்பூர்வமாக வழக்கு தொடுக்க்கப்பட்டால் மட்டுமே நமக்குத் தெரிய வரும்”, என்றாரவர்.
முழங்கால் முட்டியில் மூளையுள்ள “மந்தி”ரி .
இப்படியெல்லாம் அறிக்கை விட்டாவது டிஓஜே நடவடிக்கை எடுக்காதா என்ற நப்பாசை வருவது நியாயம்தானே.
அண்ணன் எப்ப சாகுவான் திண்ணை எப்போது காலியாகும் என காத்திருப்பவராயிற்றே தம்பி ஹிஷாமுடின்.
இவனைப்போன்ற ஈனங்களுக்கு மானம் ஈனம் சூடு சொரணை கிடையாது– நியாயமான தகுதி இருந்தால் இப்படி பேசமாட்டான்– ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
அதிகாரம் கையில் இருப்பதால் எதையும் பேசலாம்.ஆனால் அந்த அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டது என்பதை அரசியல்வாதிகள் உணருவதில்லை அடுத்த தேர்தல் வரை. மலேசியா ஒரு தங்கச் சுரங்கம். அரசியல் பதவி என்பது தங்கத்தைத் தோண்ட மக்களால் கொடுக்கப்பட்ட உரிமம்.- லைசன்ஸ் என்பதே நம் அரசியல்வாதிகளின் எண்ணம், தொடரட்டும் சுயநலசேவை.
ஐயா தமிழ் பித்தன் அவர்களே– இதனால் தான் இந்த நாடு இன்னும் மூன்றாம் உலகம்–முதலாம் உலகமாக இருந்திருந்தால் ஆட்சியில் இருக்கும் 90 % அரசியல் வாதிகள் தூக்கி எறியப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருப்பர்.- தமிழ் நாட்டையும் கவனியுங்கள்- மோடி இவ்வளவு திருடனாக இருப்பான் என்று நான் எண்ண வில்லை. ஆளுநர் ஒரு திருடன்– முதல் அமைச்சர் ஒரு திருடன் -பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களும் – நடத்தும் கேடு கெட்ட அரசியல். இதுதான் மூன்றாம் உலகம்.