நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து

Slide11பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும்  குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும்   சாத்தியம் இல்லை.

சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு செய்யப்படுவதிலிருந்து 2001 குழந்தைகள் சட்டம் அவர்களைப் பாதுகாப்பதாக மூத்த வழக்குரைஞர்கள் கூறினர்.

கடந்த காலங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், குற்றவியல் சட்டத்தின் கீழான கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டபோதும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, சிறை தண்டனை மட்டும் வழங்கப்பட்டதை வழக்குரைஞர்  கீதன்ராம் வின்சன்ட் நினைவுகூர்ந்தார்.

குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 97 இல் கூறப்பட்டுள்ளது போல் இளவயதினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஆட்சியாளரின் விருப்பத்தின்படியே தடுத்து வைக்கப்படுவர் என முன்னாள் துணை அரசு வழக்குரைஞர் கூறினார்.

“நவீன் வழக்கு கொலை என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், மரண தண்டனை வழங்க குழந்தைகள் Slide2நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அவர்களில் ஒருவருக்கு 19 வயது, மற்ற நால்வர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டாலும், அவர்களுக்கான தண்டனை குழந்தைகள் சட்டவிதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று வழக்குரைஞர் பால்ஜிட் சிங் சிது தெரிவித்தார்.

கொலைக் குற்றம் என்பதால், அவர்களைப் பிணையில் விடுவிக்க முடியாது. எனவே, இளையோர்களுக்கான தடுப்புக் காவல் சிறையில் அவர்கள் வைக்கப்படுவர் என அவர் மேலும் கூறினார்.