பெர்சத்து இளைஞர் பிரிவினர் அக்கட்சியிலிருந்து விலக பேரம் பேசப்படுவதாக டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றஞ்சாட்டியுள்ளார். ரிம10,000-இலிருந்து ரிம50,000 வரை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.
“ரிம50,000 பெறுவோரிடம் பிஎன்னுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என ஆவணங்களில் கையெழுத்தும் வாங்கப்படுகிறது.
“தேர்தலின்போது மேலும் பணமும் நன்மைகள் பலவும் கிடைக்கும் என வாக்குறுதியும் அளிக்கப்படுகிறது”, என மகாதிர் கூறினார்.
கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்….கையெழுத்தும் வாங்கப்படுகிறதாம்….நாங்கள் அப்பவே தாம் தூம் எல்லாம் பார்த்துட்டோம். ஆதாரத்தோடு வழக்குத் தொடருங்கள். வழக்கிலும் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.