ஜோ லவ் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளாரா? என்ஆர்டி ஆராயும்

johபினாங்கில்   பிறந்த  செல்வந்தரான   ஜோ  லவ்   மலேசியக்  குடியுரிமையையும்    செயிண்ட்  கிட்ஸ்  மற்றும்  நெவிஸ்   குடியுரிமையும்   வைத்திருப்பதாகக்  கூறப்படுவதைத்      தேசிய  பதிவுத்துறை (என்ஆர்டி)  ஆராயும்.

அது  குறித்து   வினவியதற்கு,  “அது   உண்மையா  என்பதை    ஆராய்வோம்”,  என  என்ஆர்டி    தலைமை -இயக்குனர்   யாஸிட்   ரம்லி  கூறினார்.

அமெரிக்க   நீதித்துறை(டிஓஜே)   தொடுத்துள்ள   மூன்று   வழக்குகள்  மூலமாகத்தான்   லோ   மலேசிய,   செயிண்ட்  கிட்ஸ்  மற்றும்  நெவிஸ்  கடப்பிதழ்கள்    வைத்திருப்பது     தெரியவந்தது.

அத்தகவல்    தெரிய  வந்ததும்    டிஏபி   ஜோ  லவ்வுக்கு   எதிராக   போலீசில்   புகார்   செய்தது.