மஇகா பிரதமர் நஜிப்பிடமிருந்து, அவர் பிஎன் தலைவரும் கூட, நிதி பெறுவதில் தவறு ஏதும் இல்லை என்று மஇகாவின் தலைமைப் பொருளாளர் எஸ். வேள்பாரி கூறுகிறார்.
“பிஎன்னில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் அதனிடமிருந்து பணம் பெறுகின்றன, அது அரசியல் ஆகும்.
“முதலாவது பிரதமரிலிருந்து, இரண்டாவது பிரதமர் மற்றும் டாக்டர் மகாதிர் முகமட் காலத்தில்கூட (முன்னாள் பிரதமர்), அனைத்து (பிஎன்) கட்சிகளும் திட்டங்களுக்கும் மற்றவைகளுக்கும் பணம் பெற்றன”, என்று வேள்பாரி மலேசியாகினியிடம் கூறினார்.
ஆமாம்- ஆனால் அந்த பணம் யாருக்கு எதற்க்காக? அந்த பணம் உனக்கும் உன்னுடைய ஜால்றாக்களுக்கும் தானே?
ம.இ.கா. என்ன உங்களுக்கும் சேர்த்து வாங்கி கொள்ளுங்கள் யார் கேட்க போறது நீங்க வைத்தது தானே சட்டம். கேட்பார் யாரு.. மேய்ப்பார் யாரு…?
எல்லாம் சுருட்டல் ஆசாமிகள் , சரிதானே சின்ன ..சாமி!
என்ன சொல்ல வருகிறீர்கள்? சொந்தப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் தான் தவறு என்கிறீர்களா? டாக்டர் மகாதீர் காலத்தில் நீங்கள் இதனைச் சொல்லியிருந்தால் நடப்பதே வேறு!
பெரியண்ணன் திருடிய மொத்தத்திலிருந்து உங்கள் பங்கை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது !
எரியப் போகும் வீட்டில் பிடுங்கியது லாபம் தானே?
ஆமாம் உன் பின்னாலே நிக்காரனுங்களே ரவுடி மற்றும் குண்டர் கும்பலுக்கும் சாப்பாடு போடுனுமலே .
திருடன் அயோக்கியன் பேச வந்துட்டான் . இதுவும் செம்பருத்தி வெளியிடுறாங்க. எவ்வளவோ பிரயோஜனமாக விஷயங்கள் செய்திகள் உள்ளது.