1எம்டிபிக்கு எதிராக பேங்க் நெகாராவால் அதிகமாக எதுவும் செய்ய இயலாது என்று கூறும் அந்த மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ், வேண்டுமானால் மலேசிய வரலாற்றிலேயே முன் எப்போதுமில்லாத அளவுக்கு “மிகப் பெரிய அபராதம்” விதிக்கலாம் என்கிறார்.
சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பேங்க் நெகராவுக்கு இல்லை என்றாரவர்.
“எங்களிடம் (மக்கள்) அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வழக்கு தொடுக்கும் அதிகாரம் பேங்க் நெகாராவுக்கு இல்லையே.
“ஆனால், அந்த அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைப்புகளுக்கு எங்களால் உதவ முடியும்.
“(1எம்டிபி விவகாரம் தொடர்பில்) சட்டத்துக்கு எதிராக நடந்துகொண்ட நிதிக் கழகங்களுக்கு பேங்க் நெகரா அபராதம் விதித்துள்ளது. அது மலேசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய அபராதம்.
“அதைத்தான் பேங்க் நெகராவால் செய்ய முடியும்”, என்றார்.
இவள் அதே குட்டையில் ஊறிய மட்டை தானே ? இவள் ஒழுங்காக தன்னுடைய கடமையை செய்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது– ஆட்சியில் இருந்தவனுக்கு சப்பிவிட்டு இப்போது இவ்வளவு பேச்சு.