1எம்டிபி ஊழல் குறித்து நிறைய பேசப்பட்டு வரும் வேளையில், அவ்விவகாரத்தை கையாள்வது எப்படி என்பது பாஸ் கட்சிக்குத் தெரியும் என்றும் அது “ஒரு திட்டத்தோடு” செயல்படும் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளாது என்றும் கூறப்பட்டுள்ளது.
“பாஸ் சொந்த கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருக்கிறது.
“பாஸுக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை. உள்நோக்கத்துடன் அவர்கள் போடும் ஆட்டப்பாட்டங்களில் நாங்கள் மயங்க மாட்டோம்”, என பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அவர் மேலும் விவரிக்கவில்லை. பாஸ், பக்கத்தான் ஹராபானின் எண்டி-கிளப்டோக்ராசி பேரணியில் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் மாதத்தில் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
உண்மைக்கும் நீதிக்கும் நியாயத்திர்ற்கும் உங்களுக்கும் என்றுமே ஒத்து வராதே -ஆச்சரியம் ஒன்றும் இல்லை டா
குரல் வழிய பிடித்துக்கொண்டு வீரியத்தை விலைபேசும் …. கொட்டைகள்
அம்மாடியோவ்…இங்கே தமிழ் படும்பாடு தமிழ்நாட்டையே மிஞ்சிவிடுமோ….
பஸ் கட்சி கொள்கை , ஐயா நிக் அஸிஸுடன் , மயானம் சென்று விட்டது !