பிஎன்னுக்குப் பயம் வந்துவிட்டது, அதுதான் டிஏபிமீது ஆர்ஓஎஸ் நடவடிக்கை

pkrசங்கப்   பதிவகம்   திடீரென்று   டிஏபி   கட்சித்   தேர்தலை   மறுபடியும்     நடத்த   வேண்டும்    என்று   கூறியிருப்பதிலிருந்து   ஒன்று   தெளிவாகத்    தெரிகிறது.   பிஎன்னுக்குப்    பயம்   வந்துவிட்டது   என்கிறார்   பிகேஆரின்   தொடர்பு   இயக்குனர்    பாஹ்மி   பாட்சில்.

“இதில்   ஆச்சரியத்துக்கு   இடமே   இல்லை……பிரதமரின்  பத்திரிகைச்    செயலாளர்   (தெங்கு  ஸரிபுடின்   தெங்கு   அஹமட்)  இதுதான்     நடக்கப்  போகிறது     என்பதை    முன்பே,   ஜூலை   3-இலேயே,     கூறிவிட்டார்”,  என  பாஹ்மி   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

அதுவும்,   நேற்றிரவு    மகாதிரைத்     தாக்கிப்    பிரதமர்    நஜிப்   அப்துல்    ரசாக்  வெளியிட்டிருந்த     அறிக்கையும்   ஆளும்  கட்சி     கலவரமடைந்திருப்பதைக்  காண்பிக்கின்றன   என்றாரவர்.

நஜிப்   அவரது   அறிக்கையில்   அன்னிய   செலாவணியில்    ஏற்பட்ட    இழப்பு   மீதான   ஆர்சிஐ    விசாரணையை   அடுத்து     அதற்குக்   காரணமானவர்கள்மீது    குற்றம்    சாட்டப்படலாம்   என்றும்  கூறியிருந்தார்.  நஜிப்பின்    இந்த    ஆருடம்   14வது   பொதுத்   தேர்தலுக்கு   முன்னதாக    நடந்தாலும்   ஆச்சரிப்படுவதற்கில்லை.

ஆனால்,  எதிரணியில்   நீண்டகாலமாக   இருந்துவரும்    தலைவர்களுக்கு     இதுபோன்ற   அரசியல்   தொல்லைகள்   எல்லாம்   பழக்கமானவைதான்   என்றார்  பாஹ்மி.