செரியானில் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியானவர்களின் தந்தையிடம் ரிம60,000 நன்கொடை: துணைப் பிரதமர் வழங்கினார்

dpmதுணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்   ஹமிடி,   தம்     சொந்த   நன்கொடையாக    60ஆயிரம்    ரிங்கிட்டைக்    கடந்த   வாரம்   வெறிநாய்க்கடி  நோய்க்குப்   பலியான   இரு    சிறுவர்களின்    தந்தையான    மஸ்லான்   பூஜானிடம்  இன்று   வழங்கினார்.

அஹமட்    ஜாஹிட்    தேசிய   பேரிடர்  நிவாரண  அமைப்பின் (நட்மா)   தலைவர்.
அவருக்கு   செரியான்   மாவட்டத்தில்     வெறிநாய்க்கடி   நோய்ப்   பரவல்   குறித்து   சரவாக்   துணை   முதல்வர்   டக்லஸ்   உக்கா   அம்பாஸ்   விளக்கமளித்த  பின்னர்  இந்த   நன்கொடை   வழங்கும்   நிகழ்வு    நடைபெற்றது.

மஸ்லானின்  பிள்ளைகளான   ஆறு-வயது  மொனிகாவும்    நான்கு-வயது    ஜேக்சனும்  ஜூலை   4-இல்   சரவாக்  பொது   மருத்துவமனையில்   இறந்து   போனார்கள்.