முன்னாள் பிரதமர் மகாதிர் கட்சி மாறியதைத் தொடர்ந்து அவரது எதிரிகள் அவர் பல 180 பாகை பல்டிகளை அடித்து வருகிறார் என்று அவரை சாடுகின்றனர்.
மிக அண்மையக் குற்றச்சாட்டு, பக்கத்தான் ஹரப்பான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வாருக்கு அரச மன்னிப்பு பெற்று அவரை பிரதமர் வேட்பாளராக்குவதற்கு மகாதிர் அளித்துள்ள ஆதரவு ஆகும்.
இன்று மாலை, மகாதிர் அவரது வலைத்தளத்தில் தமது பல்டிக்கு பிரதமர் நஜிப் ரசாக்தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார்.
“அன்வாருக்கு அரச மன்னிப்பு மற்று அவர் பிரதமர் வேட்பாளர் ஆவது ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதற்கு நான் ஒப்புதல் அளிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே நான் பல்டி அடித்து விட்டேன். நஜிப் அம்னோவுடன் பல்டி அடித்த பின்னர் நான் அதைச் செய்தேன்.
“1946 இல் அமைக்கப்பட்ட அம்னோ நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசமைப்புக்குட்பட்ட முடியாட்சி ஆகியவற்றை கொண்ட சுதந்திரத்திற்காக அது தன்னை அர்பணித்துக் கொண்டது என்று கூறிய மகாதிர், பிரதமர் நஜிப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஊழல்களில் திளைத்திருப்பது அம்னோ மீதான தமது நம்பிக்கையை இழக்கச் செய்தது என்றார்.
சட்டத்தின் ஆளுமையைத் தவறாகப் பயன்படுத்தியதோடு பகிரங்கமாக ஊழலை நிலைநிறுத்தியது போன்றவை நிகழ்ந்த போது “நான் நஜிப்பின் அம்னோ மீது நம்பிக்கை இழந்தேன், அதிலிருந்து விலகிச் சென்றேன, மற்றும் இத்தலைவரை அழிக்கும் பயணத்தில் என்னை நானே ஈடுபடுத்திக் கொண்டேன்.
“ஒரு கொடுங்கோலனை அழிக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிக்கு அம்னோ மற்றும் பிஎன் ஆகியவற்றுக்கு எதிரான கட்சிகளிடையே பொதுவான ஆதரவு இருப்பதைக் கண்டேன். அன்வாரிடம் அது இருப்பதைக் கண்டேன். நான் பல்டி அடித்த பின்னர், அன்வாரும் நானும் கூட்டாக வேலை செய்ய முடியும் என்பதைக் கண்டேன்.
“நாங்கள், மற்றும் பலருடன் சேர்ந்து நஜிப்பையும் அவரது நலிந்த, ஊழலான கொள்ளைக்கார அரசாங்கத்தை வீழ்த்தும் குறிக்கோளை அடைவதற்கு குறைவின்றி உழைப்போம்”, என்று மகாதிர் எவ்விதத் தயக்கமுமின்றி கூறினார்.
நரிக்கு வழிவகுத்துக் கொடுத்ததே கிழநரிதான். என்னவென்றால் இப்போதைய நரி, இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்ற நிலையில், தற்காலிக சிங்கமாக மாறியுள்ள கிழநரியை விட்டால் வேறுவழி இருப்பதாக தென்படவில்லை ! தெரியாத தேவதையைவிட (நஜிப் & ரோஸ்மா) தெரிந்த பிசாசு (மகாதீர்) மேல் ! பதவியில் அமர்ந்துவிட்டால் கிழநரி என்ன செய்யும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !