சரவாக் செரியான் மவட்டத்தில் 52வயது நபர் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கம்போங் ரெமுனைச் சேர்ந்த அவருக்கு வெறிநாய்க்கடி நோய் கண்டிருப்பது ஜூலை 18-இல் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார்.
மே மாதத் தொடக்கத்தில் ஒரு நாயால் கடியுண்ட அவருக்கு ஜூலை 11-இல்தான் வெறிநாய்க்கடி நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. அதன்பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் செரியான் மாவட்டத்தில் அந்நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபராவார். ஏற்கனவே அந்நோய் கண்ட நால்வர் இறந்து விட்டனர்.
பெர்னாமா