ஹாங்கேரி, புடாபெஸ்டில் நடைபெறும் அனைத்துலக நீச்சல் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் உலகப் போட்டியில் நீரில் பாயும் ( dive) பிரிவில் மலேசியா முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. மலேசியாவுக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தவர் சியோங் ஜுன் ஹூங்.
பேராக்கைச் சேர்ந்த 27-வயது விளையாட்டு வீராங்கனையான ஜுன் ஹூங், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்டெலேலா ரினோங்குடன் சேர்ந்து கலந்துகொண்ட ஒரு போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
397.50 புள்ளிகள் பெற்று ஜுன் ஹூங் தங்கம் வென்றார். இப்பிரிவில் முன்னாள் உலக செம்பியனான சீனாவின் சி யாஜி 396.00 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதனிடையே, பெண்டெலேலாவால் 9-வது இடத்தைத்தான் பெற முடிந்தது.
வாழ்த்துக்கள்,தொடர்ந்து வற்றிப்பாதையில் முன்னேறுங்கள்.