நெகிரி செம்பிலான், பாகாவ், கம்போங் கட்கோ குடியிருப்பாளர்கள் 28 பேரை மேலும் மூன்று நாள்களுக்குக் காவலில் வைக்க சிரம்பான் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இரு தரப்பு வழக்குரைகளையும் தம் அறையில் சந்தித்த நீதிபதி சித்தி மரியம் ஒத்மான், தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் மூத்த குடிமக்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களின் உடல்நலனையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது என்று சொன்னார் என கட்கோ குடியிருப்பாளர்களின் வழக்குரைஞர் எம்.சிவராம் தெரிவித்தார்.
“அவர்களின் தடுப்புக்காவலை நீட்டிக்க போலீஸ் முன்வைக்கும் காரணங்கள் போதுமானவை அல்ல என்றும் அவர் சொன்னார்”, என சிவராம் மலேசியாகினியிடம் கூறினார்.
அந்த 28 பேரும் கம்போங் கட்கோவிலிருந்து மரங்களை ஏற்றிச்சென்ற லாரிகளை வழிமறித்ததற்காக செவ்வாய்க்கிழமை தடுத்து வைக்கப்பட்டனர்.
கம்போங் கட்கோவின் புதிய உரிமையாளர்கள்மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் அங்குள்ள மரங்களை எடுத்துச் செல்வது சட்டத்துக்குப் புறம்பானது என்பது அவர்களின் வாதம்.
கிரேட், கடுமையாக போராடிய வழக்கறிஞர்களுக்கு எமது பாராட்டுக்கள் .சமுதாய அநீதிகளை எதிர்த்து தொடர்ந்த்து போராடிவீர்.
இதுதான் நமது இந்தியர்களின் நிலை