எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி தாம் இன்னும் முடிவு எடுக்கவில்ல என்று பார்டி பிரிமூமி பெர்சத்து (பெர்சத்து) அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார்.
நாம் உண்மையிலேயே நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தால்தான் நான் போட்டியிடுவேன். ஆனால், நாம் அந்த நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று மகாதிர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்சத்துவில் பல தகுதியும் அனுபவமும் உள்ள வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடலாம் என்றாரவர்.
முன்பு 40 சதவிகிதம் அரசாங்க வேலைகளில்
இருந்த இந்தியர்கள், பின்பு 03 சதவிகிதமாக
இளைத்து போனார்கள் !
இந்த கொடுமை நடந்ததும் மகாதீர் பிரதமராக இருந்த
காலத்தில்தான். 1970களில் என் தந்தை இரையில்வே
மண்டோராக வேலை செய்த காரணத்தால், எங்கள்
குடும்பம் தாப்பா ரோட் இரையில் ஸ்டேசனுக்கு முன்பாக
அமைந்துள்ள வீடுகள் ஒன்றில் குடியிருக்கும் சந்தர்ப்பம்
கிடைத்தது . அந்தகாலகட்டத்தில் சொந்தக்காரர்கள்
யாராவது தபால்கடிதம் அனுப்பி இருந்தால், அதை கொண்டுவந்து
கொடுக்கும் தபால்காரர் ஒரு இந்தியராக இருப்பார் ! மாதம் ஒரு
முறை மின்சார மீட்டர் ரீடிங் அல்லது தண்ணீர் பில் கொடுக்க
வருபவரும் இந்தியராகத்தான் இருப்பார் !! மின்சார இலாக்கா,
JKR அலுவலகம், டெலிகோம், மற்றும் பெரும்பாலான அரசாங்க
அலுவலகம் சென்று பார்த்தால், கிராணி வேலையிலிருந்து
பியோன் வரை நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். இன்னும்
சொல்லப்போனால், அன்று கடற்படைத்தளபதியாக கொமாண்டோ
தனபாலசிங்கம் என்ற தமிழரே என்றால் பாருங்களேன் ! ஆனால்
மகாதீர் பிரதமரான பிறகு நம் சமூகத்தின் தலையெழுத்தே அலங்
கோலமானது . ஒரு பக்கம் ரப்பர் தோட்டங்களில் இருந்தும்,
செம்பனை தோட்டங்களில் இருந்தும் மலேசிய இந்தியர்கள்,
மேம்பாடு காரணமாக அவைகள் விற்கப்பட்டதால், சாரை
சாரையாக அங்கிருந்து வெளியேரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் திட்டமிட்ட சதியாக அரசாங்க வேலை
வாய்ப்புக்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது . இதில் இன்னொரு
அதிர்ச்சிதரும் வேதனையான சங்கதி என்னவென்றால், இந்த
காலகட்டத்தில் ம.இ.கா தேசிய தலைவராக இருந்த சாமிவேலுவால்
இந்த ஏழைசமூதாயத்துக்காக ஒன்றும் செய்யமுடியாமல்
போனதுதான் !
மனம் தெளிந்து உணர்ந்த மகாதீர் மலேசியார் யாவரும் நம்மை பெற ஆவணம் செய்வார் என்று நம்புவோமாக. தாம் எந்த இனத்தில் இருந்து வந்தவர் என்பதை உணாந்து நாடும் மக்கள் யாவரும் நம்மை பெற புதிய அரசங்கத்தின் குரலாக இருந்து மூவினமும் நம்மை பெற செய்ய வேண்டும்.
திரு தப்பா பாலாஜி கூறியுள்ளது அனைத்தும் உண்மையே
. அனைத்தையும் கோட்டைவிட்ட நாம் , இனி அந்த நிலைமை வேண்டாம் என்போர் நன்கு சிந்தித்து செயப்பாட்டு , செயலில் இறங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் . வன்முறை இனம் என தற்போது அவச்சொல்லால் பேசப்படும் நாம் , அதனை ஒளித்து நாம் தமிழர் என ஒன்றிணைந்து ,ஒன்றுபட்டு படித்த சமூகமாக முன்னேறுவோம் .
ஐயா TAPAH BALAJI அவர்களே சப்பிகொண்டிருந்தால் ஐயா சாமியால் என்ன செய்ய முடியும்? ஆனால் தன்னுடைய வங்கிக்கு சிரித்து கொண்டே சென்றான். உங்களுக்கும் தெரியுமே ஏனென்று?
சரி அய்யா இதை நாம் சமூககம் இன்றுமட்டும் கண்டுகொள்ளவே இல்லையே
TAPAH BALAJI சொல்வது முற்றிலும் உண்மை. ஆனாலும் இப்போது நாம் முதலை வாயில் சிக்கியுள்ளோம். மகாதிமிரையும் ஒதுக்க முடியவில்லை, அல்தான்துயா நஜிப்பையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.ஆகவே, கூட்டிக் கழித்து பார்க்கையில், எந்தக் கட்சி என்று பார்க்காமல், எவர் சமுதாயத்துக்காக பாடுபடுகின்றாரோ, அல்லது சளைக்காமல் குரல் கொடுக்கின்றாரோ அவருக்கு ஒட்டு போட்டு வந்துவிடுங்கள்.
mr mannan அவர்களே ! மன்னிப்போம், மறப்போம் என்பதட்கு இது காதலன் காதலியின் ஊடல் கதை அல்ல, வஞ்சகன் மகாதிரினால் ஒரு இளிச்சவாய் சமுதாயமே இன்று பொருளாதார ரீதியாக நடுத்தெருவில் நிற்கிறது !! அவன் தன் மகன் முக்ரீஸை பிரதமராக்க மல்லுகட்ட்டிக்கொண்டு இருக்கிறான், இது தெரியாமல் மன்னிப்போம் மறப்போம், திருந்திவிட்டான் என்று இறக்கப்படுகிறீர்கள் !!!