சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அலுவலகம் ஆயுதம் தரித்த அதிகாரிகள் அவற்றை எப்போது பயன்படுத்தலாம் எப்போது பயன்படுத்தக்கூடாது என்பதைக் கூறும் புது நடத்தை விதிகளைத் தயாரித்துள்ளது.
எட்டு மாதங்கள் செலவிட்டு தயாரிக்கப்பட்ட அந்தச் ‘சுடும் ஆயுதங்களுக்கான நடத்தை விதிகளை’ ஏஜி முகம்மட் அபாண்டி அலி இன்று வெளியிட்டார்.
அமலாக்கப் பிரிவுகள் சொந்தமாகவே வழிகாட்டும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன. அவற்றுடன் இப்புதிய விதிகளும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அபாண்டி கூறினார்.