ஆர்ஓஎஸ் உத்தரவை எதிர்த்தாலும் டிஏபி அதன் செயலவை(சிஇசி)க்கு மறுதேர்தல் நடத்தத் தயாராகி வருகிறது.
“14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில் இந்த (ஆர்ஓஎஸ்) உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு டிஏபி விருப்பமில்லாமலேயே அதன் சிஇசிக்கு மறுதேர்தல் நடத்த ஆயத்தமாகவுள்ளது. அதேவேளை சட்ட நடவடிக்கை எடுக்கும் எங்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்”, என டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் கூறினார்.
அவர் இன்று புத்ரா ஜெயாவில் ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் ஆர்ஓஎஸ்ஸிடம் டிஏபி கொடுத்த கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசித்துக் காட்டினார்.
மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டு ஆர்ஓஎஸ் ஜூலை 17-இல் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் விதமாக டிஏபி அக்கடிதத்தைக் கொடுத்தது.
ஆர்ஓஎஸ் அதிகாரி முகம்மட் நவாவி மாட் அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
நம்பிக்கை நாயகனும் அம்னோ நாதாரிகளும் தேர்தலுக்கு முன் DAP யை ஒரு வழி பண்ணவே எல்லாம் நடக்கிறது. நீதி துறை நம்பிக்கை நாயகனின் கையால் துறையாக இருக்கும் பட்சத்தில் DAP க்கு ஏதும் நடக்கலாம்.
ஆளும் கட்சிகள் எதிர்கட்சிகளை சாகடிக்க நினைப்பதில் ஜனநாயக மரபில் தவிர்க்க இயலாத ஒன்று. நம் நாட்டிலும் அப்படியே. ஆனால் தற்போது DAP எதிர்நோக்குவது கடுமையான ஒன்று அல்ல. மேலுமொரு கட்சி தேர்தலை நடத்திவிட்டு போவது சிரமமான ஒன்று அல்ல. ஆனால் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று இங்கே உள்ளது. நடக்கப்போவது மூன்றாவது தேர்தல். இந்த தேர்தலிலும் DAP குளறுபடி செய்துவிட்டது என ROS கூறாதா? இதற்கு ஒரே வழி, கட்சி தேர்தலின்போது தேர்தல் முறையினை கண்காணிக்க DAP என் ROS சை அழைக்க கூடாது? இந்த ‘கண்காணிப்பு’ குறித்து இதுவரை DAP யும் சரி, ROS சும் சரி, இரண்டுமே வாயை திறக்கவில்லை. ஏன்?…… ரெண்டுமே சேந்து நம்ம காதுல நன்னா பூ சுத்துறா! கடைசி நேரத்துல எவனாவது இந்த ரகசியத்தை உடைச்சி விடத்தான் போறா!