பக்கத்தான் ஹராப்பானின் அமைப்புவிதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால் அது இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.
“அடுத்த வாரம் ஹராபான் அமைப்புவிதிகள் தயாராகி விடும். (அதன் பிறகு) பதிவு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வோம்”, என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அமைப்புவிதிகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே அக்கூட்டணி பதிவுக்கு மனுச் செய்து கொள்ளும் அதன் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜூலை 14-இல் அக்கூட்டணி அதன் அடையாளச் சின்னத்தைக் காட்டியது, பொறுப்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தது. அமைப்புவிதிகள் மட்டுமே தயாராகாமல் இருந்தன. இப்போது அவையும் தயாராகிவிட்டன.இனி, ஆர்ஓஎஸ் அக்கூட்டணியை அங்கீகரிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
முன்பு, பக்கத்தான் ரக்யாட் பதிவு செய்துகொள்ள முயன்றபோது ஆர்ஓஎஸ் அதை அங்கீகரிக்க தயக்கம் காட்டியது.