மன்றங்கள் பதிவகத்தால் கட்சி இடைநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வழியாக, டிஎபி கட்சி மத்திய செயலவைக்கு புதிய மறுதேர்தல் நடத்தும் என்று கட்சியின் தலைமைச் செயாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.
நேற்று, கட்சியின் அந்தோனி லோக், ரோஸ் கேட்டுக்கொண்டபடி, ஆட்சேபனையின் கீழ் டிஎபி தேர்தலை நடத்தும். நாங்கள் மறுதேர்தல் நடத்த பயப்படுகிறோம் என்று பிஎன் கூறுகிறது. தேர்தல் நடத்துவோம், 2012 பேராளர்கள் பட்டியல்படி என்று லோக் கூறியதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியின்படி, ரோஸ் மீது இவ்விவகாரம் குறித்து டிஎபி வழக்கு தொடரும்.
DAP மறுதேர்தல் நடத்தாது. ROS சை ஒரு கை பார்த்துவிடுவோம், என வீர வசனம் பேசியது, இந்த DAP. ROS அசைந்து கொடுக்கவில்லை. DAP கூடாரத்துக்குள் நுழைந்தால், தடுக்கி விழுந்தாலும் ஒரு லாயர் (வழக்குரைஞர்) மீது தான் விழவேண்டும். DAP அலுவலகத்தில் கதவை திறப்பவன் முதல் கழிவறை கழுபவன் வரை அத்தனை பேரும் லாயர்(பூரோ) களே. ROS சை கிழி கிழி ….என கிழிக்கப்போகிறார்கள் என நினைத்தோம். ஆனால், இப்போதுதான் தெரிகிறது, அத்தனையும் அட்டைக்கத்தி. தோட்டா இல்லாத துப்பாக்கிகள். பி.பட்டு, கற்பால் சிங், வி,டேவிட், லீ லாம் தாய், போன்ற உண்மையான போராட்டவாதிகள் இருந்த DAP யை தற்போதைய கரப்பான் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன.
singam அவர்களே ! உண்மைதான் !! நம்மை எல்லாருமே ஏமாத்துறானுங்க !!!