புத்ரா உலக வாணிக மையத்தில் அம்னோ இளைஞர் பிரிவினருக்கும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பிரிவினருக்குமிடையில் நிகழ்ந்த சிறு மோதலை நினைத்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெட்கப்பட வேண்டும் என இன்ஸ்பெக்டர் – ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இதுவரை 11 பேரைப் போலீசார் அழைத்திருப்பதாக இன்று புக்கிட் அமானில் காலிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“முதலில் விசாரணை முடியட்டும். அது ஒரு சில்லரைத் தகராறு”, என்றாரவர்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களின் விவரத்தைக் கேட்டதற்கு அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
அதேவேளை அனைவரும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நாமெல்லாம் வளர்ந்து விட்டோம், இன்னும் சிறுவர்கள் அல்ல. முதிர்ச்சியைக் காட்ட வேண்டும்.
“இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை நினைக்கவே வெட்கமாக உள்ளது”, என காலிட் மேலும் கூறினார்.
செவ்வாய்க்கிழமை, சுமார் 30 பேர் அடங்கிய பெர்சத்து இளைஞர் குழு ஒன்று, அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவர்களின் “மறைப்பதற்கு எதுவுமில்லை 2.0” கருத்தரங்குக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு அம்னோ தலைமையகம் அமைந்துள்ள புத்ரா உலக வாணிக மையம் சென்றபோது அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த சுமார் 100 பேர் அவர்களைத் தடுக்க இரு பிரிவினருக்குமிடையில் சிறிது நேரம் தள்ளுமுல்லு நிகழ்ந்தது.
இந்திய இளைஞர்கள் அடித்துக் கொண்டால், எந்த ஒரு ஆலோசனையுந் சொல்ல மாட்டீர்கள் , அறிவுரையும் சொல்லமாட்டீர்கள். உங்கள் பிள்ளைகள் அதேபோன்ற தகராறுகளில் ஈடுபட்டால், குத்துது ,குடையுது. RECYCLING .
இது டு லேட் ! நாங்கள் எங்கள் தானை தலைவனின் ஆட்சியில் இந்த புத்ரா உலக வாணிப மையத்தில் FRU படையை கொண்டு வந்து நிறுத்தியவர்கள் ! இது ஆளும் கட்சிக்கும் ! எதிர் கட்சிக்கும் மோதல் ! நாங்கள் எங்களுக்குளேயே ! தமிழனும் ! தமிழனும் ! அடித்துக்கொள்ளவே உங்கள் படையை திரட்டியவர்கள் ! மைக்க ஆண்டு கூட்டத்திலேயே தானை தலைவனின் தலைமையில் ! கிளைக்கு ஒரு மணியத்தின் அதட்டலையும் ! மிரட்டலையும் ! பார்த்த வீர தமிழர்கள் நாங்கள் ! இதெல்லாம் என் வீர தமிழனுக்கு சகஜம்மப்பா!!
ஆ ஆ ஆ நல்ல போட்டி , இந்தியர்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் . தூரமாக நின்று வேடிக்கை பார்த்தாலே போதுமானது.