பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்த கேள்விக்கு முறயான பதில் கொடுக்கப்படாதது ஏன் என்று வினவுகிறார் டிஏபியின் சிரம்பான் எம்பி அந்தோனி லொக்.
அக்கேள்விக்கு ஜூலை 25-இல் எழுத்துவடிவில் பதிலளித்த பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், ஸ்ரீபெர்டானாவில் நடந்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு பிரதமரின் கேளிக்கை அலவன்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது என்றும் “மிதமான செலவுதான்” ஆனது என்றும் கூறினார்.
அந்த உபசரிப்பில் ஒவ்வொன்றுக்கும் என்ன செலவானது என்று விளக்கம் கேட்டிருந்ததாகவும் தம்முடைய கேள்வியை அஸலினா புரிந்துகொள்ளவில்லைபோல் தெரிவதாகவும் லொக் கூறினார்.
“அது(பொது உபசரிப்பு நடத்துவது) பிரதமருக்குள்ள சலுகை என்பது தெரியும். அது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
“ஆனால், அதற்கு என்ன செலவானது என்று தெரிந்துகொள்ளும் உரிமை எம்பிகளான எங்களுக்கு உண்டு”, என லொக் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வளவோ சுருட்டியாச்சி – இப்படியும் சுருட்டக்கூடாதா என்ன? என்று இந்த நாதரிகள் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்? இப்படித்தானே 60 ஆண்டுகள் ஓடிவிட்டன?