கிட் சியாங்: உடல் சார்ந்த வீழ்ச்சிதான், அரசியல் வீழ்ச்சியல்ல

 

kitfallsநேற்றிரவு குளுவாங்கில் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு வந்த டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவரது தலையில் காயத்திற்கான ஒரு பிளாஸ்டருடன் காணப்பட்டார்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாத அவர், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அரசியல் போராட்டத்தை வலியுறுத்தினார்.

தமது தலையில் ஏற்பட்டுள்ள காயத்தை உடல் சார்ந்ததுதான். அது அரசியலில் ஏற்படாது என்றார்.