நேற்றிரவு பக்கத்தான் ஹராபான் நிதி திரட்டும் விருந்து ஒன்றில் அக்கூட்டணியின் ஐந்து தலைவர்களின் உருவப் படங்களைக் கொண்ட ஓவியங்கள் ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரிம16,700 திரட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஓவியமே அதிக விலைக்கு, ரிம4,900க்கு, ஏலம் போனது.
இரண்டாவது நிலையில் அதிக விலைக்கு ஏலம் போனவை டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், அமனா தலைவர் முகம்மட் சாபு ஆகியோரின் ஓவியங்கள். அவை ரிம3,500 க்கு ஏலம் விடப்பட்டன.
பக்கத்தான் ஹராபான் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓவியம் ரிம3,000க்கு விலை போனது.
காலஞ்சென்ற டிஏபி தலைவர் கர்பால் சிங்கின் ஓவியம் ரிம1,800க்கு விற்கப்பட்டது.
மவன், லிம் குவான் எங் படத்தை காணோம்.
வரைந்தவர் கெட்டிக்கார வியாபாரி, சிறைக்கு போக வேண்டியவனை வரைந்து நேரத்தை வீண்டிப்பதை தவிர்த்துள்ளார்