ஜோகூர் பாரு, ஆயர் மோலெக் போலீஸ் லோக்கப் நிலைமை துயரப்படத்தக்கதாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தை நிலைநிறுத்த முடியாது என்றால், அது மூடப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறுகிறது.
அந்த லோக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகள் அவர்களுக்கு சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடியதாக இருக்கின்றன. மேலும், அவர்களுக்கு போதுமான உணவும் தண்ணீரும் தரப்படுவதில்லை என்று சுஹாகாம் தலைமை ஆணையர் ரஸாலி இஸ்மாயில் கூறுகிறார்.
அந்த லோக்கப்பில் காணப்படும் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அவை கொடுமையானவை மற்றும் மனிதத்தன்மையற்றவை என்று சுஹாகாம் கருதுகிறது என்றாரவர்.
தடுப்புக்காவல் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரங்கள் நிலைநிறுத்தப்பட முடியாது என்றால். ஆயர் மோலெக் மற்றும் இதே போன்ற நிலைமைகளில் இருக்கும் இதர தடுப்புக்காவல் நிலையங்கள் மூடப்பட்டேயாக வேண்டும் என்று ரஸாலி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கைஉஇல் கூறுகிறார்.
நிதி பற்றாக்குறை என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாமின் அறிக்கையை நன்குப் படித்தாவது நம்மிடையே குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் இனிமேலாவது தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; தங்களின் பிள்ளைகள் இப்படிப் பொறுப்பற்ற முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது பொறுப்பற்றப் பெற்றோர்களே முக்கியக் காரணமாகின்றார்கள்; அவர்களும் இனிமேல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; “கண் கெட்டப் பிறகு ஏன் நமக்கு சூரிய நமஸ்க்காரம்”. அதுதான் இப்போது அதிகமாக நடக்கின்றது. சுஹாகாம் அறிக்கையின் மூலம் நடக்கின்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி.
நிதி பற்றாக்குறையா? திருடன்களும் ஊழல்வாதிகளும் மலிந்த ஆட்சி/அதிகாரம். நாடு என்றுமே முதலாம் உலகத்தை பிடிக்கமுடியாது. அதற்கான மன நிலை கிடையாது பெரும்பாலான மலேசியர்களுக்கு.
ஏதோ கடமைக்காக ஓர் அறிக்கை விடுகின்றார் தலைவர்! அப்புறம் தூங்கி விடுவார்.