டாக்டர் மகாதிர் முகம்மட், தம்மை ஒரு “சர்வாதிகாரி” என்று முத்திரை குத்துவோர் 2003-இல் தாமே முன்வந்து பிரதமர் பதவியிலிருந்து விலகியதை மறந்து விடுகிறார்கள் என்றார்.
சர்வாதிகாரிகள் பதவியிலிருந்து தாமே இறங்குவதில்லை, ஆயுள் உள்ளளவும் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வருவார்கள்.
“நான் சுய விருப்பத்தின்பேரில்தான் பதவி விலகினேன். எனக்குப் பிறகு என் மகன் வரவில்லை. கட்சித் தலைவர்கள்தான் வந்தனர். பதவிக்கு வந்தவுடனேயே கட்சியையும் அரசாங்கத்தையும் எனக்கு எதிராகத் திருப்பினார்கள்.
“எந்தவொரு சர்வாதிகாரியும் சுயமாக பதவி விலகியதில்லை”, என்று மகாதிர் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
22 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்த மகாதிர், சர்வாதிகாரிகள் அதிகாரத்தை இழந்த பிறகு மக்கள் அவர்களை விடமாட்டார்கள், பொங்கி எழுவார்கள் தண்டிப்பார்கள் ஆனால், தமக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.
“நான் பதவி விலகிய பிறகு எனக்குப் பின்வந்தோர் என்னைத் தீயவனாகச் சித்திரிக்க முயன்றார்கள், ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள், ஆதரவு கொடுத்தார்கள்.
“என்னைக் கண்டனம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்ட எதிர்க்கட்சிகள்கூட என்னையும் நான் உருவாக்கிய கட்சியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். என்னையும் அவர்களின் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளனர். எந்தச் சர்வாதிகாரிக்காவது இப்படிப்பட்ட அனுபவம் உண்டா?”, என்றவர்
சோற்றில் உப்பு போட்டு உண்பவன் நான் அதனால் நானே முன்வந்து பிரதமர் பதவியிலிருந்து விலகினேன்,
கொலை, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றசாட்டுகள் இருந்தும் பதவி விலகாமல் இருப்பவர் சோற்றுக்கு பதிலாக எதையோ சாப்பிடுகிறாரோ என்ற சந்தேகம் வந்து விட்டதா இந்திய கேரள வம்சாவளியின் புதல்வனான மகாதீர் அவர்களே !
உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த கிழக்கை நோக்கி கொள்கையை ஒழுங்காக நடைமுறை படுத்தி இருந்தீர்களேயானால்,
நீங்கள் உட்பட பல அம்னோ தலைவர்கள்/அமைச்சர்கள் இந்நேரம் தற்கொலை புரிந்து பரலோகம் சென்று இருப்பார்கள்.
இப்போது கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டாலும், குத்த புணர்ச்சியில் ஈடுபட்டாலும், கற்பழித்தாலும், சிரித்து கொண்டே இரு என்று வேறு சொல்லி விட்டீர்கள்.
அப்புறம் குறைபட்டு கொண்டால் எப்படி ?
பொய்ச்சொல்றான்,பொய்ச்சொல்றான்,நம்பாதீங்க !