முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியை, இன்று பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் சந்தித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் அமைப்பு, பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
“ஹராப்பான் கூட்டணியில் இந்திய சமூகத்திற்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லையென நாங்கள் அறிகிறோம். அக்கூட்டணியில் இந்தியர் கட்சி இல்லை. இந்தியர்கள் உறுப்பினராக இருக்கும் பல்லினக் கட்சிகள்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை.”
“டாக்டர்கள், வக்கீல்கள் என்றில்லாமல், சாதாரணத் தோட்ட மக்களின் ஆதரவை ஹிண்ட்ராப் பெற்றிருப்பதை எண்ணி, உண்மையில் நாங்கள் பாராட்டுகிறோம்.”
ஆக, ஹிண்ராப்ட் அமைப்பைச் சேர்த்துகொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம், ஹராப்பானின் உறுப்பினராக இல்லையென்றாலும் கூட, எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாகவாவது ஹிண்ட்ராப் இருக்க வேண்டும்,” என மகாதீர் கூறியுள்ளார்.
14-வது பொதுத் தேர்தலில், தோட்டப்புற இந்தியர்களின் வாக்குகளைப் பெற ஹிண்ட்ராப் உதவுமென தான் நம்புவதாக மகாதீர் கூறினார்.
2007 ஆம் ஆண்டில், இந்து கோயில்கள் உடைப்பு மற்றும் இந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தெருவில் இறங்கிப் போராட, ஹிண்ட்ராப் இயக்கமே முக்கியக் காரணம்.
அப்பேரணியைத் தொடர்ந்து, பொ.உதயக்குமார் உட்பட, ஹிண்ட்ராப் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐ.எஸ்.ஏ) கீழ் கைது செய்யப்பட்டு, 2009-ம் ஆண்டில்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தக் காலக்கட்டத்தில், பிரிட்டனுக்குச் சென்ற வேதமூர்த்தி, மலேசிய இந்தியர்களின் இந்நிலைக்குப் பிரிட்டன் அரசுதான் காரணம் எனக்கூறி, பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஹிண்ட்ராப்பின் தலைமைதுவத்தில் உதயகுமார் மற்றும் வேதமூர்த்திக்கு இடையேச் சர்ச்சை உண்டானது.
2012-ம் ஆண்டு, நாடு திரும்பிய வேதமூர்த்தி, மலேசிய ஹிண்ட்ராப் இயக்கத்தை முறையாகப் பதிவு செய்தார்.
13-வது பொதுத் தேர்தலில், பிரதமர் நஜிப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேதமூர்த்தி கையெழுத்திட்டார்.
ஹிண்ட்ராப்பின் இந்தியர்களுக்கானப் பெருந்திட்டத்தை நஜிப் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வேதமூர்த்தி தனது முழு ஆதரவைப் பாரிசான் நேசனலுக்கு வழங்கியதோடு, அனைத்து இந்தியர்களையும் பாரிசானுக்கு வாக்களிக்கச் சொல்லி பிரச்சாரமும் செய்தார்.
தேர்தலில் பாரிசான் வென்றதை அடுத்து, வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சில் துணை அமைச்சராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.
எனினும், வாக்குறுதி அளித்ததுபோல் அரசாங்கம் நடந்துகொள்ளவில்லை எனும் காரணத்திற்காக, 2014-ல் வேதமூர்த்தி தனது துணை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
ஆளும் தரப்பில் இந்தியர்களை பிரதிநிதித்து ம.இ.கா. இருப்பது போன்று, எதிர்தரப்பு வரிசையிலும் ஓர் இந்தியர் கட்சி இருந்தால் நன்மையே. ஆனாலும் அதை யார் தலைமை ஏற்று நடத்துவது என்பதே கேள்வி. வேதமூர்த்தி ஏற்கனவே ஆளும் தரப்பில் துணை அமைச்சர் பதவியில் இருந்ததினால், எதிர்தரப்பில் அமர்ந்திருக்க அவர் தகுதி பெற இயலாதர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
நசுக்கப்பட்டு நலிவுற்ற மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்க எதிரணிக் கூட்டணியில் ஓர் அரசியல் கட்சி இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால் வரும் 14-வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் எதிரணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காமல் போகலாம். அதேசமயம் தேர்தலில் வென்று பிறகு ‘கழற்றி’ விடப்படாமல் இருக்க இந்தியர் பரதிநிதித்துவம் எதிரணியில் வெறும் பேச்சளவில் மட்டும் இருந்தால் ஆயா வாயால் வடை சுட்ட கதைதான். மாறாக இந்தியர் பிரதிநிதித்துவம் என்பது ஹரப்பானில் உறுப்பியம் பெறத் தக்கவகையில் அமைய வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. ஆனால் அது ஹிண்ராப் உருவில் அமைவது எங்கோ நெருடுகிறது. காரணம் கடந்த 13-வது பொதுத் தேர்தலில், பிரதமர் நஜிப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேதமூர்த்தி கையெழுத்திட்டார். பின்னர் அமைந்த ஆட்சியில் அவரின் வாயை அடைக்க துணையமைச்சர் பதவி கிடைத்ததும் வாயை மூடிக்கொண்டார். மாறாக, பதவியை உதறித் தள்ளிவிட்டு அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றச் செய்திருந்தால் வேதமூர்த்தி இந்தியர்களின் ஏக பிரதிநிதியாக இன்று கொண்டாடப்பட்டிருப்பார். ஆனால் சுயநலத்தால் அவரின் முயற்சியும் வீணானது, வாக்களித்த இந்தியர்களும் ஏமாந்தார்கள். மீண்டும் ஒருமுறை இந்த ‘வரலாறு’ திரும்பாதிருக்க ஹரப்பானில் ஓர் அங்கமாக இந்தியர் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் கோரிக்கை.
அங்கும் இங்கும் கட்சி தாவுவது வேதாவுக்கு புதிதா என்ன. நடத்தட்டும் நடத்தட்டும் .
நவின் பாரதி அருமையான கருத்து. மக்களும் சிந்தித்தால் அனைவருக்கும் நலமே.
நாம் ஏமாற்றப்படாமல் இருக்க ஒற்றுமை தேவை–எட்டப்பன்கள் தேவை இல்லை. ஆனால் உண்மை நிலை ? gatco -thaamarai -ஒரு உதாரணம்?