அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் 60 ஆம் ஆண்டு மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது..
செய்திகள்ஆகஸ்ட் 30, 2017
அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் 60 ஆம் ஆண்டு மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது..
அறுபது ஆண்டுகள்
அதி விரைவில் ஓடிவிட்டன . மனம் கவரும் மலேசியா மக்கள் வாழ்க்கையில் மாற்றம்: ஏற்றம் . வாழ்க நம் நாடு .
அனைத்தும் இறைவன் செயல். . l.
60 ஆண்டுகளுக்கு முன்பு இன, மத பேதமின்றி செழிப்பாக வாழ்ந்த நாம், இன்று, இன வெறி, மத வெறி நம் நாட்டில் தலை விரித்தாடுகிறது. அரசியல்வாதிகள், தங்களை மலேசியர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. பூமிபுத்திரா, புக்கான் பூமிபுத்திரா என்று தங்களை பிரித்துக் கொள்கிறார்கள். மலாய்க்காரர் அல்லாதவர் அதிக அளவில் இடம்பெற்ற ஹிண்ட்ராப், பெர்சே போன்ற போர்ராட்டங்களில் அரசின் அடாவடித்தனம், கையெறி குண்டுகள், ரசாயன நீர்பாய்ச்சுதல் போன்றவை கண்மூடித்தனமாக இடம்பெற்றன. ஆனால், ஒரே இனமான சிகப்பு சட்டை அணிந்தோர் அதே செயலில் ஈடுபட்ட பொழுது , அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. நேற்றைய தினம் தலைநகரில், ரோஹிங்கியா முசுலீம் இனத்தவர் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முசுலீம் என்பதனால், அவர்கள் மீது தண்ணீர் ரசாயன குண்டுகள் எல்லாம் பாய்ச்சப்படவில்லை. நம் நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது? Where are we heading for after 60 years of independence ?
மலாயா சுதந்திரம் அடைந்தபோது அந்த வயதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. ஆனால் இன்று அந்த மகிழ்ச்சியில் ஒரு சதவீதமாவது இருக்கிறதா என்றால் கிடையாது என்றே கூற வேண்டும்- அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறேன் – எனினும் இது என் நாடு- நம்மவர்கள் இந்தோ பங்களாக்களை விட கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சுதந்திரத்தின் போது மூன்று இனங்களும் அண்ணன் தம்பி ஆனால் இன்று? ஐயா singam கூறுவது உண்மையே. விடிவு என் கண்களுக்கு தென் படவில்லை.
என்று பெற்றோம் சுதந்திரம் நாம்…!!!!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். என்றும் நலமுடன் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்…
இந்த 60 ஆண்டுகளில் மலேசியாவில் நமது தமிழர்களின் பங்கு மிக பெரியது. வந்தஇருந்த (மா) தலைவர்கள் சுரண்டியே வாழ்ந்து விட்டார்கள். வரப்போகும் இப்போ இருக்கும் தலைவர்கள் நமக்காக இந்த சமுதாயத்துக்காக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அகதிகள் மலேசியாவில் தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு மலேசியாவின் பாதுகாப்பு நகைச்சுவைக்குரியதாகவும் கேலிக்குரியதாகிவிட்டது.
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான மகாதீர் கூறுவதைபோல் போலீசை கொன்றால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.
அதேபோல் ரோஹிங்கியாகள் மியான்மர் ராணுவத்தை தாக்கினால் அதன் விளைவுகளை ரோஹிங்கியாகள் சந்தித்தே ஆக வேண்டும்.
மலேசிய அரசாங்கம் இந்த ரோஹிங்கியாகளின் ஆர்ப்பாட்டத்தை அனுமதித்ததை பார்த்தால், ரோஹிங்கியா பயங்கரவாதிகளை மலேசியா பகிரங்கமாக ஆதரிக்கிறது என்பதை உலகுக்கு நிரூபித்து விட்டது.
பயங்கரவாதிகளை ஆதரியுங்கள் என்று மலேசிய இஸ்லாமிய மதம் சொல்லி கொடுக்கிறதுபோலும்.