பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சிஎச்ஆர்) ஹோஸ் லூஸ் சி. ஹேஸ்கன் மலேசியாவிற்குள் நுழைவதற்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
கேஸ்கன், நன்கு அறிமுகமான பிலிப்பினோ மனித உரிமைகள் ஆர்வலர், வரும் ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசியாவில் ஜனநாயகத்தின் நிலை மீதான மாநாட்டில் உரையாற்ற பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஏன் கேஸ்கன் தடைசெய்யப்பட்டார் அல்லது அவர் திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் அவர் கோலாலம்பூரில் ஒரு மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
கேஸ்கன் கேஎல்ஐஎ-இல் மாலை மணி 5.00 அளவில் வந்து சேர்ந்தார். இச்செய்தி வெளியிடப்படும் நேரத்தில் (இரவு மணி 9.54), அவர் இன்னும் அங்கேதான் இருக்கிறார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலை குறித்து சுஹாகாம் ஏமாற்றமடைந்துள்ளது என்று அதன் உறுப்பினர் ஜெரால்ட் ஜோசெப் கூறியதோடு, தாங்கள் இன்னும் கூடுதல் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்றாரவர்.
இம்மாநாட்டை இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுசிலோ பாம்பாங் யுடியுனோ தொடங்கிவைக்கிறார்.
அடாடா! மிருக உரிமைகள் ஆணையும் என்று சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே!
சமீபத்தில் ரோகின்யா பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்த ரோகின்யா அகதிகளை மலேசிய தலைநகரில் தெரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்த மலேசியா போன்ற பயங்கரவாதி ஆதரவு நாடுகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பது ஒன்றும் புதிலல்லவே.
Fantastic! Mr. RAHIM A.S.S. அருமையான வாதம். ஒரு ஜனநாயகவாதி நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. ஆனால் IS தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுகிறர்கள். எப்படி? இதற்கெல்லாம் எதிர்கட்சிக் காரர்கள் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்ய மாட்டார்களா? பத்து வருடங்களுக்கு முன்பு MACC மாடியிலிருந்து ஒரு DAP காரன் விழுந்தான் . அதை வைத்துக்கொண்டு இன்றுவரை அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது இந்த DAP. முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்களா?