பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) கூட்டு நிறுவனரான அனினா சாடுடின் மற்றும் உதவித் தலைவர் ஹமிடா ஓஸ்மான் ஆகிய இருவரும் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
கட்சியிலிருந்து விலகியதை முதலில் அறிவித்தவர் அனினா.
“பெர்சத்துவிலிருந்து விலகிக்கொண்டதை நான் இன்று அறிவிக்கிறேன். மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் (உம்மா) நேசிக்கும் அடிப்படையில் மக்களைத் தற்காக்கும் எனது போராட்டத்தை ஓர் அரசுசார அமைப்பின், அதை நான் விரைவில் அறிவிப்பேன், வழி தொடர்வேன்”, என்று பண்டார் பாரு பாங்கியில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அனினா கூறினார்.
உதவித் தலைவர் ஹமிடாவின் விலகலை கட்சியின் தலைமைச் செயலாளர் ஷகாருடின் முகமட் சாலே பின்னர் அறிவித்தார்.
பெர்சத்துவின் தலைமைத்துவ மன்றம் அவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டதை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அப்பவே சொன்னேனே கேட்டீங்களா? மகாதிமிர் லேசுப்பட்ட ஆள் இல்லேன்னு. இருந்தாலும் ஒன்று மலைப்பாம்பு(அல்தான்துயா நஜிப்) ஒன்று முதலை(மகாதிமிர்) நாட்டை காப்பாத்துங்கம்மா!