சட்டவிரோதமான தாஃபிஸ் பள்ளிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த செப்டெம்பர் 14 இல், கோலாலம்பூரில் டாருல் இட்டிஃபாகியா தாஃபிஸ் பள்ளியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துடன் மொத்தம் 212 தீ விபத்துகள் தாஃபிஸ் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளன.
தாஃபிஸ் பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான பள்ளிகளில் பதிவு செய்யப்படாத பள்ளிகள் எத்தனை, ஊராட்சிமன்றங்களின் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் எத்தனை, போன்ற விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட அன்வார், இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் இன்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்