பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மகாதீர் , சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார், முகம்மட் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் திரும்பியதற்கு ‘வாழ்த்து’ தெரிவித்தார்.
“மாட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் தாவியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.
“அவர் தவளை மாதிரி. அம்னோவிலிருந்து பாஸுக்குத் தாவினார், பிறகு பிகேஆருக்குத் தாவினார், பெர்சத்து கட்சியிலிருந்த எனக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது மீண்டும் ஓட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டார்.”
“அம்னோவுக்கு என் வாழ்த்துகள். மாட் தாயிப் போல இன்னும் அதிகமானோர் இருந்தால், எதிர்வரும் தேர்தலில் அம்னோ தோற்றுபோகும்,” என ஃப்.எம்.தி. செய்திகளுக்கு அவர் கேலியாகக் கூறியிருந்தார்.
1964-லிருந்து அம்னோ , பாரிசானில் இருந்த முகமட் தாயிப், ஏப்ரல் 2013-ல் பாஸ் கட்சியில் இணைந்தார். பிறகு, 2015-ல், மாற்று அரசாங்கத்தை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையுடன் பிகேஆருக்குத் தாவினார்.
மாட் தாயிப் போன்றவர்களை நம்ப முடியாது என்று மகாதீர் தெரிவித்தார். தாயிப் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 3.8 மில்லியன் ரிங்கிட்டை ஆஸ்திரேலியாவில் தவறாக பிரகடனம் செய்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
இருப்பினும், ஆங்கிலம் சரிவர தெரியாது, நாணய விதிகள் புரியவில்லை எனக் காரணங்கள் கூறப்பட்டதால், நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், நீதிமன்றம் அவசரப்பட்டு, தவறான முடிவு எடுத்துள்ளது என்று விசாரணை குழுவால் பின்னர் கண்டறியப்பட்டது.
“அவருக்கு ஆங்கிலம் தெரியுமென்று எனக்குத் தெரியும், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த மாதிரியான ஆட்களை நம்ப முடியாது,” என்றார் மகாதீர்.
மாட் தாயிப் அம்னோவிற்குத் திரும்பியதை, பத்திரிக்கையாளர் மாநாடு நடத்தும் அளவுக்கு, நஜிப்பும் ஷாஹிட்டும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதுவது, தனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் மகாதீர் தெரிவித்தார்.
நேற்று மாலை, ஓர் அவசர ஊடக மாநாடு கூட்டி, முஹமட் தாயிப் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நேர்மையுடன் அம்னோவிற்குத் திரும்பி வந்துள்ளதாக, நஜிப் அறிவித்தார். எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், அம்னோ-பாரிசான் வெற்றியை உறுதிசெய்ய, தாயிப் போராட விரும்புகிறார் என்றும் நஜிப் தெரிவித்தார்.
இதற்கிடையே, தாயிப் அம்னோவிற்கு மீண்டும் தாவியது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் மாட் சுஹாய்மி ஷாஃபி தெரிவித்துள்ளார்.
முஹம்மது தாயிப் பிகேஆருடன் இருந்தபோது, கட்சிக்குப் பெரியதாக எந்தவொரு பங்களிப்பையும் வழங்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
அவனும் nyanyok இவனும் nyanyok .ஆகமொத்தம் NYANYOK ,NYANYOK