கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ல், நியூஜென் கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டது. கட்சியின் பதிவுக்கு இராஜரத்தினம் ஆறுமுகன் மற்றும் எஸ். கோபி கிருஷ்ணன் இருவரும் முயற்சி செய்தனர். கட்சி பதிவு பெறுவதற்கு முன், ராப்பாட் மலேசியா (RAPAT) , பவர் மலேசியா (POWER) , மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) , மலேசியத் தமிழ் நடவடிக்கை அணி (TAF) மற்றும் இன்னும் சில அரசுசார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றினோம் என்கிறார் இராஜரத்தினம் .
அவர் அளித்த செய்தி விபரங்கள் வருமாறு.
கட்சி பதிவு பெற்ற பின், கட்சியின் தோற்றுனர்களான எஸ்.கோபி கிருஷ்ணன் தலைமைச் செயலாளராகவும், இராஜரத்தினம் கட்சியின் பொது ஆலோசனை குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
மார்ச் 11, 2017 இல், இராஜரத்தினம் கட்சியின் உதவித் தலைவராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 30-ல், கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கட்சிக்குப் புதிய பெயரும் சின்னமும் வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பதிவு இலாகா அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையே, கட்சியின் தலைவரும் துணைத் தலைவரும் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22 இல், கட்சியின் தலைமைச் செயலாளர் கோபி கிருஷ்ணனும் தனது பதவியை இராஜினாமா செய்தார். இச்செய்தியைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த இராஜரத்தினம், 2017/2019 ஆம் ஆண்டுக்கான உச்சமன்ற உறுப்பினர்களை நியமிக்க/தேர்ந்தெடுக்க பொதுக்கூட்டத்தைக் கூட்டினார்.
பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
செப்டம்பர் 16-ல் நடந்த 5-ம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் ஒருமுகமாக எடுத்த முடிவுகள் :-
இராஜரத்தினம் தலைமையிலான 2017/2019 ஆம் ஆண்டு புதிய நிர்வாகக் குழுவிற்கு முழு ஆதரவு அளித்தல்.
பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் புதிய பெயர், சின்னம், முகவரி மற்றும் நோக்கங்களுக்கு முழு ஆதரவு அளித்தல்.
நியூஜென் கட்சி, ‘சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சி’ (மீரா) எனும் புதிய பெயரில் தொடர்ந்து செயல்படும். பல்லினக் கட்சியான இதில், நாடுதழுவிய நிலையில் சிறுபான்மை மக்கள் அனைவரும் உறுப்பியம் பெறலாம்.
14 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைவது அல்லது ஒத்துழைப்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தைப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கொடுத்தல்.
பக்காத்தான் ஹராப்பானில் இருக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் சம்மதத்துடனும் அக்கூட்டணியில் இணைய வேண்டும். ‘மீரா’ நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை இனங்களின், குறிப்பாக, இந்தியர், பூர்வக்குடியினர், சபா-சரவாக் பூர்வக்குடியினர் ஆகியோரின் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் பிரதிநிதிக்கும் கட்சியாக விளங்கும்.
பல அரசுசாரா இயக்கங்களின் ஆதரவு
நியூஜென் கட்சி (மீரா) பக்காத்தான் ஹராப்பானுடன் இணைய நூற்றுக்கும் அதிகமான அரசுசாரா இயக்கங்கங்களின் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் கூறுகிறார்.
அத்தலைவர்கள் நியூஜென் கட்சியில் இணைவதற்கு விருப்பமும் தெரிவித்துள்ளனர். இதன்வழி, நியூஜென் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 100,000-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறார் இராஜரத்தினம்.
தேசிய அதிகாரமளிக்கும் நிகழ்வு 2040 (NEA@2040)
நியூஜென் கட்சி அரசுசாரா இயக்கங்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :-
நாள் : அக்டோபர் 1, 2017 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 9 – மாலை 5 மணி வரை
இடம் : தி.கே.பி. கூட்டம் & மாநாடு , செண்ட்ரல் பிளாசா, ஜாலான் சுல்தான் இஸ்மாயில், கோலாலம்பூர்.
கட்சியில்லாமலும் இந்தியர்கள் பக்கத்தான் ஹரப்பானில் வேலை செய்யலாம் ! ஆயிரம் காட்சிகள் திறந்து , கொள்கையில்லாமல் குப்பை பொறுக்கவா ?
Comedy piece
இது ஒரு இந்தியர்களோ, அல்லது தமிழர் சார்ந்த கட்சியோ என்று சொல்லாத வரைக்கும் நன்றி! சிறுபான்மை சமூகம் அதிலும் பூர்வ குடியினரையும் சேர்த்து வழிநடத்தும் எண்ணம் கொண்டிருந்ததால் பாராட்டுக்கள்.ஆனால் pakatan harapan நில் சேரும் எண்ணம் கொண்டிருப்பதுதான் ரொம்பவும் இடிக்கிறது, காரணம் இப்போது அது நிறைய ஓட்டை விழுந்த படகு.வரும் தேர்தலுக்கு பிறகு முற்றாக முழுகிவிடும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் முடிவு . அதனால் எதிர்க்கட்சியில் சேர்வதாக இருந்தாலும்,அல்லது வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாக இருந்தாலும்,முதலில் கட்சியை பலப்படுத்திக்கொண்டு பிறகு ஒரு முடிவு எடுக்கலாமே !!
புதிய புதியதாக அரசியல் கட்சிகள் முளைக்க காரணம் என்ன. ஒரு சேவை கோழி கலையில் கூவது போன்று. அந்த சேவல் கோழி விடிந்ததும் கூவதை நிறுத்தி கொள்ளும். இதே போன்று தமிழ் பத்திரிகைகள் முளைத்து ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் காணாமல் போகின. இதில் ஒரு தமிழ் பத்திரிகை கொஞ்சம் மேலே சென்று உங்களை முதலாளி ஆக்குகிறேன் ஷேர் பார்ட்னர் பணத்தை போடுங்கள் அதன் பதிவு பத்திரம் தருகிறேன் என்னை நம்புங்கள் என கூவின. இப்போ என்ன அச்சி என தெரியவில்லை. இப்படி போனவைகள் நாம் சமீப காலங்களில் பார்த்தது உண்டு. உருப்படியாக இருக்கும் ஒரு கட்சியில் சேர்ந்து உங்கள் சேவைகளை ஆற்றுங்கள் அதுவே இருக்கும் நமது சமுதாயதுக்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய சேவை. சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் கட்சியாக என கூறும் நீங்கள் எப்படி தேர்தலில் போட்டி இட்டு ஜெவிக்க போகிறிர்கள். நமது விகித சரம் குறைந்து கொண்டு வருகிறது. பங்களாதேஷ் இப்போ நம்மை மிஞ்சும் அளவு அவர்களின் வருகை இருகிறது. இதை நீங்கள் ஒரு ஆய்வு செய்து நம் சமுதாயம் முன் கொண்டு வந்தால் மகிழ்ச்சியே. எத்தனையோ கட்சிகள் வந்து தேர்தல் சமயத்தில் ஆகாயம் உயர பேசுகின்றன. உங்களை காளான்கள் போல் தான் பார்க்க முடிகின்றன. சந்தடியில்லாமல் இல்லாமல் சேவை செய்யும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இப்போதும் இருக்கின்றன. பெயரை குறிபிடாமல். அந்த நல்ல உள்ளங்களை பாராடுவோம். நன்றி
ஐபிஎப் போல் கொடி பிடிக்கவும் , மலர் தூவவும் ,மாங்கா கொட்டைகள் பேசுவதை ,நூறு சதவிதம் கட்சி ஆதரிக்கிறது என்று புளங்காகிதம் அடைவதும், தான் உங்களின் கட்சி தோற்றுவிப்பும் .- ஒன்றும் சாதிக்கமுடியாது .- ஆனால் சம்பாதிக்க முடியும் -. மூழ்கிப்போய்க்கொண்டிருந்த ஜாதி என்ற அரக்கனை தூக்கி நிறுத்திய ஐபிஎப் எங்களுக்கு மேலும் கேவலத்தை ஏற்படுத்திவிட்டது- மேலும் ஒரு பட்டம் சிவப்புச்சட்டைக்காரர்கள் -இவர்களின் பிழைப்புக்கு ஏழை ஜாதிக்காரர்கள் நாங்கள் தான் பணயம் . –
TAPAH BALAJI , ஜி,மோகன், vin ? vin ? சொல்வது முற்றிலும் சரி. தெரியாம தான் கேட்கிறேன். உங்க கட்சியிலே வங்காள தேசிகளையும், ரோஹிங்கியா பெங்காளிகளையும் சேர்க்கவில்லையா? என்ன அநியாயம்.
ஏதோ, கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு செனட்டர் பதவியாவது கிடைக்காதா என்னும் ஏக்கம் இவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! எவ்வளவு நாளைக்குத்தான் கோசடப்பா என்று பெயர் எடுப்பது?
உங்கள் கட்சி தோன்றுவதற்குள் இவ்வளவு குழப்பமா !! சிறு பான்மை இந்தியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் !! ஜாதி அடிப்படையிலா !! இந்தியர் இளைஜர் இயக்கம் ! என்று ஆரம்பித்து , என் சங்கம் இந்தியர்களுக்கு அல்ல இந்துக்களுக்கு என்று விவேகானந்தரின் பெயரை சொல்லி ! தலையில் முண்டாசு கட்டி ! ஒரு கட்சிக்கு தலைவரும் ஆகி சாதனை படைத்தும் வீட்டிற் !! இனி என்ன இந்திய சமுதாயத்தை ! குறிப்பாக தமிழர்களை ! அதுவும் தாழ்த்த பட்ட தமிழர்களை ! உச்சிக்கு உயர்த்த போகிறேன் ! ஆதரவையும் ! பணத்தையும் அள்ளி கொடுங்கள் என்று வீர வசனம் பேசும் தருவாய் வந்துவிட்டது ! வாழ்த்துக்கள் !! இந்த முட்டாள் சமுதாயம் முழித்து கொள்வதற்க்குள் ! சட்டு ,புட்டு என்று நாலு காசு சம்பாதிக்கும் வேலையை பாரும் ஐயா !!