அம்னோவுக்குத் திரும்பிவந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தயிப்புக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று கூறும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீசுக்கு, அவர் அம்னோவில் என்ன செய்யப்போகிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை .
“அது எனக்குத் தெரியாது. நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்”, என்றார்.
முன்னாள் தலைவர்கள் திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் பிஎன் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகவே உள்ளது என்று நஸ்ரி கூறினார்.
“கட்சிக்குப் பெரும் புள்ளிகளை அழைத்துவருவது முக்கியமல்ல. மக்களின் மனத்தைக் கவர வேண்டும். அதுதான் முக்கியம்”, என்றார்.
நஸ்ரி, அருமையான முட்டாள்! அம்னோவுக்கு திரும்பி வந்த மாட் தய்யிப் என்ன செய்யப் போகிறார் என்றா கேட்டீர்? கொள்ளையடித்த 260 கோடி இன்னும் பங்கு போட்டு முடியவில்லை. அதில் கொஞ்சம் மாட் தயிப்புக்கு கொடுங்கள். கூடிய விரைவில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு போக வேண்டுமாம்.
பணத்தை எப்படி கடத்தலாம் என்றாவது சொல்லிக் கொடுக்க மாட்டாரா என்ன?
நீ எல்லாம் அம்னோவில் இருந்து இன்னும் கொள்ளை அடிக்கும் போது தயிப்பும் வந்து இன்னும் கொஞ்சம் கொள்ளை அடிக்கதான்….