சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சிமாறத் திட்டமிடுகிறார்கள் என்ற ஆருடத்தை மறுத்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அதில் எள்ளளவும் உண்மையில்லை என்றார்.
டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் பத்து எம்பி, அது மாநில அரசுக்குக் குழிபறிப்பதற்காக பிஎன் மேற்கொள்ளும் “விஷமத்தனமான பிரச்சார”த்தின் ஒரு பகுதி என்றார்.
“சிலாங்கூர் அரசு கவிழப்போகிறது, பிகேஆர், பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிமாறுவார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பனை, முட்டாள்தனமான பேச்சு.
“பிகேஆரால் வழிநடத்தப்படும் சிலாங்கூர் அரசு நிலையானது, மக்களிடமிருந்து ஆட்சிசெய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. அதற்குக் களங்கம் உண்டாக்க கறைபடிந்த, ஊழல்மிக்க பிஎன் மேற்கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் தோல்வியில்தான் முடியும்”, என்றாரவர்.
துடைக்க முடியாத அழுக்கு மேலும் சேர்கிறது . எல்லா மடத்தன காரியங்களுக்கும் பேர் போன பாரிசான் கட்சிகள்.