ரோஹிஞ்யா விவகாரம் சரியாகக் கையாளப்படாவிட்டால் ஆசியான் ‘ஐஎஸ் புகலிடமாக’ மாறும் அபாயம் உண்டு: அனிபா எச்சரிக்கை

anifahமியான்மாரின்  ராக்கைன்  மாநிலத்தில்   ரோஹிஞ்யா   விவகாரத்துக்கு  அவசரமாக   முடிவு  காணப்பட    வேண்டும்,   தவறினால்  அது   தீவிரவாதிகள்  வளருமிடமாக   மாறி  விடும்  என  மலேசிய    வெளியுறவு  அமைச்சர்   அனிபா  அமின்   கூறினார்.

அவ்விவகாரம்  தொடர்பில்   மலேசியாவின்    ஆழ்ந்த  கவலையைத்    தெரிவித்துக்கொண்ட    அனிபா,   தென்கிழக்காசியாவையும்   தெற்காசியாவையும்    தனது   தளமாக்கிக்கொள்ள    நாட்டம்  கொண்டுள்ள    ஐஎஸ்   தீவிரவாதிகள்  அவ்விவகாரத்தை    அவர்களுக்குச்   சாதகமாகப்   பயன்படுத்திக்  கொள்ள  முனைவார்கள்    என்றார்.

“அது   நடந்தால்    இப்பகுதியில் (ஆசியானில்)  நிலைத்தன்மை   வெகுவாக  பாதிக்கப்படும்    ஒரு  நிலையை   மலேசியாவும்  அதன்  அண்டைநாடுகளும்  எதிர்நோக்கும்”, என்றாரவர்.  அனிபா  நேற்று  நியு  யோர்கில்   ஐக்கிய   நாடுகள்  மன்றத்தில்     நடைபெற்ற   மியான்மார்    முஸ்லிம்  சிறுபான்மை  மக்கள்மீதான   இஸ்லாமிய   நாடுகள்    அ மைப்பின்  குழுக்  கூட்டத்தில்   கலந்துகொண்டு   பேசினார்.