போலீஸ் 1எம்டிபிமீது மேற்கொண்ட விசாரணை முடிவுக்கு வந்தது. அதில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொதுமக்களுக்குத் தெரிவிக்க எதுவுமில்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபுசி ஹருன் தெரிவித்தார்.
“விசாரணை முடிவடைந்தது. மேல் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை.
“ஒருவேளை பொதுக்கணக்குக்குழு(பிஏசி) அல்லது அமைச்சரவை உத்தரவிட்டால் மேல்விசாரணை செய்வோம்”, என ஃபுசி கிளந்தான், கோத்தா பாருவில் கூறினார்.
நஜிப்பின் மீதுள்ள விசுவாசத்தில் முன்னவரைக்காட்டிலும் தாம் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்துவிட்டார் இந்நாள் IGP ! “விசாரணை முடிவடைந்தது. மேல் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை”. இதற்குமேலும் நீதிமன்றம் எதற்கு ? நீதிபதிக்குத்தான் என்ன வேலை ? அனைத்து அதிகாரங்களும் ஒருவர் கைக்குள் வரவேண்டும் என்ற “அன்றைய பிரதமர் மஹாதிரின் கனவு” இன்றைய மலேசியாவை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது. அவரின் கனவு இன்று அவரை விழித்தெழவைத்து அவருக்கே மிரட்டலாக உருவெடுத்திருக்கிறது. இந்த வயதில் இது இவருக்குத் தேவைதானா ? இதுதான் கர்மவினையோ ?
1 MALAYSIA De BANKRUPT … என்று விசாரணையை தொடங்கி
1 MORE DRAFT BEER … ப்ளீஸ் என விசாரணையை முடித்து இருக்கிறீர்கள். சபாஷ் !
ஹா ஹா ஹா ஹா – இவனைப்போன்ற அடிவருடி அரை வேக்காடுகள் தான் – நம்பிக்கை நாயகனுக்குத்தேவை. தரம் தகுதி திறமை தேவை இல்லை– இதெல்லாம் பார்த்து நாடு செயல் பட்டால் இந்த நாடு எங்கோ போயிருக்கும். இப்படி பட்ட ஈனங்கள் தலை நிமிர்ந்து பெரிய வெங்காயம் போல் நடந்து கொள்கின்றனர்- மலேஷியா மாக்கள் கண்டு கொள்வதே இல்லை சிலரை தவிர.