கிட் சியாங்: மசீச ஒரு கோட்பாடற்ற கட்சி என்பதை பீர் விழா மீதான அதன் நிலைப்பாடு காட்டி விட்டது

 

Liewbetterbeerfestivalசிறந்த பீர் விழா 2017 நிகழ்ச்சியை நடத்துவதற்கு டிபிகேஎல் அனுமதி அளிக்க மறுத்ததை மசீச தலைவர் லியோ தியோங் லாய் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மசீச ஒரு கோட்பாடற்ற கட்சி என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அக்கட்சியைச் சாடியுள்ளார்.

மசீச ஒரு கோட்பாடுகள் இல்லாத அரசியல் கட்சி என்ற நிலைக்குத் தாழ்ந்து விட்டது. அதோடு அக்கட்சி முற்றிலும் ஒரு கட்டொழுங்கற்ற கட்சியாகி விட்டது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

முதலில், லியோ அந்நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் அத்தடையை அவர் ஏற்றுக்கொண்டார்.

மசீச ஒரு முற்றிலும் கட்டொழுங்கற்ற கட்சியாகி விட்டது. அதன் தலைவரை அக்கட்சியின் இதர தலைவர்கள்கூட, அனைத்து நிலையிலும் உள்ளவர்கள், மதிப்பதில்லை. அவர்கள் தலைவர் லியோவின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைத் தெரிவிக்கின்றனர் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

ஒரு பீர் விழாவை பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி அதற்குத் தடை விதிக்கும் அளவிற்கு மலேசியாவின் தற்காப்பும் பாதுகாப்பும் அவ்வளவு மோசமாகி விட்டதா என்று அவர் வினவினார்.