கிழக்கு மலேசியர்கள் தீவகற்ப மலேசியாவிலும் கிழக்கு மலேச்சியாவில் உள்ள தீவகற்ப மலேசியர்கள் கிழக்கு மலேசியாவிலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே தேர்தல் ஆணையத்தையும் புத்ரா ஜெயாவையும் கேட்டுக்கண்டிருக்கிறது.
இதை நாடாளுமன்றத் தேர்வுக்குழு 2011-லேயே பரிந்துரைத்ததைச் சுட்டிக்காட்டிய தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் அவ்வமைப்பு, அதை அவசரமாக அமல்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகக் கூறிற்று.
சாபா, சரவாக்கில் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ள 150,000-க்கும் மேற்பட்டோர் தீவகற்ப மலேசியாவில் வசிப்பதாக அது மதிப்பிடுகிறது.
“இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கத் திரும்பிச் செல்வதற்கு இலட்சக்கணக்கான ரிங்கிட்டையும் நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும்.
“அதன் காரணமாகத்தான் அங்கு வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.
“கடந்த பொதுத் தேர்தலின்போதுகூட நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சாபா, சரவாக்கில் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைவுதான்”, என்று பெர்சே குறிப்பிட்டது.
பெர்சே இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அதன் தலைமையகத்தில் “வாக்களிப்பைச் சுலபமாக்குவீர்” என்னும் இயக்கத்தை இணையத்தில் தொடக்கி வைத்தது.