எம்பிபிஜே-இல் வெளிப்படைத்தன்மை குறைந்து வருகிறது

mppjபெட்டாலிங்  ஜெயா  மாநகராட்சி  மன்ற(எம்பிபிஜே)த்தின்   நடவடிக்கைகளில்  வெளிப்படைத்தன்மை   இல்லை   என   குடியிருப்பளர்   சங்கங்களின்  கூட்டமைப்பு  மைபிஜே  கூறியுள்ளது.

மன்றம்  செப்டம்பர்  26-இல்,  அதன்  ஆண்டு  பட்ஜெட்  கலந்துரையாடலை    நடத்தவுள்ளது.  ஆனால்,    கவுன்சிலர்களுக்கும்    குடியிருப்பாளர்களுக்கும்  ஆகக்  கடைசி   நிதிப்  புள்ளிவிவரங்கள்  இன்னும்  கிடைக்கவில்லை   என   அது  கூறிற்று.

”கலந்துரையாடல்   பொருளுள்ளதாக   அமைய  வேண்டுமானால்,  நாங்கள்  செப்டம்பர்  11-இல்   அனுப்பிய   கடிதத்தில்   கேட்டுக்கொண்டபடி    எம்பிபிஜே-இன்  2016ஆம்  ஆண்டு  தணிக்கை  செய்யப்பட்ட   கணக்கறிக்கைகள்,      ஆகக்   கடைசி   செலவின   அறிக்கைகள்,  வருமாண்டுக்கான   திட்டங்கள்   எல்லாம்  எங்களுக்குக்  கிடைத்திருக்க   வேண்டும்.

“இதுவரை  கிடைக்கவில்லை  என்பதை   வருத்தத்துடன்   சொல்ல  வேண்டியுள்ளது”,  என  மைபிஜே   பிரதிநிதி   எஷாம்  சலாம்   கூறினார்.

மைபிஜே-இன்  இன்னொரு   பிரதிநிதி,  ஜெப்ரி   பாங்,  முன்னாள்  பெட்டாலிங்  ஜெயா  மேயர்   முகம்மட்  ரோஸ்லான்   சகிமான்   மன்றத்தின்   நடவடிக்கைகள்   தொடர்பான    அறிக்கைகளை   வெளியிடுவது   வழக்கம்  என்றார்.

“இதுதான்  செலவுத்தொகை,  எதற்காகச்  செலவிடப்பட்டது,  அதனால்  மக்களிடம்  ஏற்பட்ட   தாக்கம்   என்பதையெல்லாம்   அறிக்கைகளாக   வெளியிடுவார்கள். இப்போது  எதுவுமில்லை”,  என்றார்.

தணிக்கை   செய்யப்பட்ட   2016  ஆம்  ஆண்டு  நிதி   அறிக்கை   எம்பிபிஜே  அகப்பக்கத்தில்   வெளியிடப்பட்டிருக்க   வேண்டும்   என்றவர்   குறிப்பிட்டார்.