ஹரப்பான் தலைவர் என்ற முறையில் மகாதிர் முதல் முறையாக சரவாக் செல்கிறார்

 

MtocontestGE14எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிரதமர் மகாதிர் அம்னோவையும் பாரிசானையும் விட்டு விலகிய பின்னர் சரவாக்கில் முதல் முறையாக பேசவிருக்கிறார்.

கூச்சிங்கில் நடைபெறும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கை பற்றிய செராமாவில் மகாதிர் பேசுகிறார்.

இச்செராமில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமானாவின் தேர்தல் இயக்குனர் ஹாத்தா ரமலி மற்றும் மாநில ஹரப்பான் தலைவர்கள் சோங் சியன் ஜென், பாரு பியன் மற்றும் முகமட் ஃபிட்சுவான் ஸைடி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

தீபகற்ப மலேசியாவின் எதிரணித் தலைவர்கள் சரவாக்கில் நுழைவதில் பிரச்சனைகளை எதிர்கொள்வது வழக்கமான ஒன்று.

ஆனால், இம்முறை மகாதிர், கிட் சியாங் மற்றும் ஹாத்தா ஆகியோர் இச்செராமாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று சரவாக் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுக்கமாக வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

சரவாக் மாநிலத்திற்கான ஹரப்பானின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை.