நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்தது

macc-arrest1நேற்றிரவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.யின் மூன்று ஊழியர்களைக் கைது செய்தது. குடிநுழைவு தொடர்பான RM20,000  ஊழல் குற்றச்சாட்டை  விசாரணை  செய்வதற்கு உதவியாக அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உத்துசான் மலேசியா செய்திகளின்படி, அவர்கள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் ஊழியர்கள் ஆவர்.

ஃப்.எம்.தி. தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உடனடியாக உறுதிபடுத்த சிவராசா மறுத்துவிட்டார்.

“இன்னும் 2 மணி நேரத்தில் நான் அறிக்கை வெளியிடுவேன், அதைப் பற்றி அனைவருக்கும் பதிலளிப்பேன்,” என்றார் அவர்.

கைதானவர்களில், 45 வயதான அரசியல் செயலாளர் ஒருவரும் அடங்குவார். நேற்று நண்பகலில், செராசில் உள்ள ஓர் உணவகத்தில், தனிப்பட்ட உதவியாளரும் ஓர் அலுவலரும் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் அந்த அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஏ.சி.சி.-யின் தகவல்படி, இன்று அவர்கள் மூவருக்கும் தடுப்புக் காவல் நீட்டிக்க நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை, தொழில்முறை தகுதிகளுடன் கொண்டு வந்தது தொடர்பாக, அந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் தெரியும் எனப்  புகார் கொடுத்துள்ள நிறுவனம் கூறியதன் அடிப்படையில் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர், என எம்.ஏ.சி.சி.-யின் ஆரம்பத் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.

குடிநுழைவுத் தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கு, அவர்கள் RM55,000 கேட்டதாகப் புகார்தாரர் கூறியுள்ளார்.