பெர்மைசூரி ஜோகூர் ஸரித் சோபியா அல்மர்ஹும் சுல்தான் இட்ரிஸ் ஷா, மலேசிய சிறார்கள் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து உலக அரங்கில் அவர்களுக்குரிய இடத்தைப் பெறுவதற்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குக் கொடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்கிறார்.
ஆங்கிலத்தில் பேசும் எழுதும் திறன் மிக மோசமாக தரம் தாழ்ந்து போயிருப்பதால் இதைச் செய்வது அவசரமும் அவசியமும் ஆகும் என்றாரவர்.
“இந்நிலையைத் திருத்த அரசாங்கத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. ஆங்கிலமொழி ஆசிரியர்கள், அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜிஓகள்), பெரிய நிறுவனங்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முனைப்புடன் ஈடுபட வேண்டும்”, என்றவர் இன்று ஜோகூர் பாருவில் ஓர் அறிக்கையில் கூறினார்.
மலேசிய ஆங்கில மொழி கற்பிக்கும் சங்கத்தின் புரவலருமான ராஜா ஸரித் சோபியா, சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதையும் பேசுவதையும் ஊக்குவித்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மறுக்க முடியாத உண்மை ! ஒரு காலத்தில் நம்மவர்கள் தான் இந்நாட்டில் ஆங்கில மொழியில் புலமையும் திறமையம் பெற்று விளங்கினார்கள் ! இப்போது அதுவும் தரம் தாழ்ந்து விட்டது ! நமது இளைய சமுதாயத்தினர் ,குறிப்பாக நமது தமிழ் பள்ளி மாணவர்கள் , மும் மொழியில் புலமை பெற்றவர்களாக ,திறமை பெற்றவர்களாக விளங்க வேண்டும் ! தாய் மொழி தமிழ் ! தேசிய மொழி மலாய் ! உலக தொடர்பு மொழி ஆங்கிலம் ! நமது நாட்டில், கல்வியிலும் !பொருளாதாரத்திலும் ! காலை கலாச்சாரத்திலும் முதன்மை பெற்றவர்களாக ! சிறந்த சமுதாயமாக உலகின் தொழில் நுட்ப ! அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப சிறப்புடன் வாழ நம்மை மொழி அறிந்த சமுதாயமாக மாட்ரி கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் !