முன்னுதாரணமாக இருக்க, எம்எசிசி நஜிப்பின் ரிம5 மில்லியனை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்

 

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) ஒரு முன்னுதாரணமாக இருக்க, அது யாயாசான் பிரிஹாதினுக்கு பிரதமர் நஜிப் ரசாக் வழங்கிய ரிம5 மில்லியன் மானியத்தை நஜிப்பிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பிகேஆரின் தொடர்புகள் இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில், எம்எசிசி தற்போது பிஎன் தாக்கல் செய்துள்ள அதன் வேட்பாளர்கள் பட்டியலை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. நஜிப் ரசாக் பிஎன்னின் தலைவர் என்று ஃபாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

எம்எசிசிக்கு நஜிப் வழங்கிய ரிம5 மில்லியன் தவறான கருத்துகளையும் ஊகங்களையும் பொதுமக்களிடையே உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது. அதனைத் தவிர்ப்பது மிகக் கடினமாகும். ஆகவே, எம்எசிசி அதன் நேர்மையான நிலைப்பாட்டை நிலைநிறுத்த அந்த ரிம5 மில்லியன் “நன்கொடையை” அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஃபாமி கேட்டுக்கொண்டுள்ளார்.