18 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்யக் கோரும் சட்டவரைவு ஒன்றை பிகேஆர் எம்பி ஒருவர் அக்டோபர் 23-இல் கூடும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.
அலோர் ஸ்டார் எம்பி கூய் ஹிஸியாவ் லியோங், அந்த உத்தேச சட்டவரைவு குறித்து மக்களவைச் செயலாளர் ரூஸ்மே ஹம்சாவுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார்.
கூட்டரசு அரசமைப்பின் பகுதி 12(4)-இல் 18வயதுக்குக் குறைந்த ஒருவரின் சமயம் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தீர்மானிக்கப்படும் என்று கூறுகிறது. அதில் “பெற்றோர்” என்றிருப்பதை “பெற்றோர் இருவராலும்” என்று மாற்றுவதற்கு அச்சட்டவரைவு பரிந்துரைக்கிறது என்றார் கூய்.
சிலர் அதில் உள்ள ‘ பெற்றோர்’ என்பது ஒருமைச் சொல் என்று கூறி, குழந்தையின் மதத்தைத் தீர்மானிக்க பெற்றோர் ஒருவரின் முடிவு போதும் என்கிறார்கள்