ஷாரிர் அப்துல் சமட் 14வது பொதுத் தேர்தலில் தம்முடைய ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளத் தயாராகி விட்டார். தமக்கு எதிராக எதிரணியினர் எப்படிப்பட்ட ‘பெரும்புள்ளி’யை நிறுத்தினாலும் அவரை எதிர்ப்பதற்குத் தயார் என்கிறார் அவர்.
“முதலில் ஜிஇ 14 பிரச்னையில்லாத எளிதில் வெற்றிபெறக்கூடிய தேர்தலாக இருக்கும் என்றுதான் நானும்கூட ஆருடம் கூறியிருந்தேன். ஆனால், இப்போது பார்த்தால் காலிட் அப்ட் சமட் (ஷா ஆலம்) போன்றோர் எல்லாம் ஜோகூருக்கு வருவதாகத் தெரிகிறது. எல்லாரும் ஜோகூர்மீது ஆர்வம் காட்டுவதால் நானும் களத்தில் இறங்கி அவர்களுடன் மோதிப்பார்க்க முடிவு செய்து விட்டேன்”, என்றாரவர்.
எதிரணியினர் ஜோகூரைக் கைப்பற்றுவதைக் குறியாகக் கொண்டிருக்கும் வேளையில் தாம் ஒதுங்கிக்கொள்வது முறையாகாது என்று ஷாரிர் குறிப்பிட்டார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் பின் பணம் பண்ணுவது எவ்வாறு ? மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதே மக்கள் சேவை என்றாகிவிட்டது. ஆட்சியும் அதிகாரமும் உங்கள் கரங்களில், பிறகென்ன நடத்துங்கள் நாடகத்தை. குற்றவாளி இங்கு (மனிதனிடம்) தப்பித்துக்கொண்டால் என்ன-அங்கு (இறைவனிடம்) தப்பமுடியாது !
Beeshman சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!
இவனின் பேரில் மரியாதை இருந்தது ஆனால் எப்போது நம்பிக்கை நாயகனின் கை ஆள் ஆனானோ அன்றே இவனும் ஒரு நாதாரி என்றாகி விட்டது.