ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டதாக அறிவித்தது, கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது.
சில பிரதான ஊடகங்களின் அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகையில், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பார், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) ஆய்வுக்கு ஒப்படைக்கப்படும்,” என்று சுப்ரமணியம் கூறினார்.
அப்பட்டியலில், தாங்கள் குறிவைத்திருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ம.இ.கா. தங்கள் வேட்பாளர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது என்றார் அவர்.
எனவே, ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார்?
மஇகா ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக, மஇகா-வின் நம்பத்தகுந்த வட்டாரம் உறுதிபடுத்தியது.
“எனினும், சட்டமன்ற மட்டத்தில் பாரிசான் உறுப்புக் கட்சிகளுடன் சில இடங்களை மாற்றிக்கொள்ளும் சாத்தியம் உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் கடந்த தேர்தலின் போது, நின்ற இடங்களிலேயே நாம் போட்டியிடுவோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறியதாக ‘பெரித்தா டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 13-வது பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட், தாப்பா (பேராக்), காப்பார், கோத்தா ராஜா, சுபாங், உலு சிலாங்கூர் (சிலாங்கூர்), தெலுக் கெமாங் (நெகிரி செம்பிலான்), சிகாமாட் (ஜொகூர்) மற்றும் கேமரன் மலை (பஹாங்) நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா. போட்டியிட்டது.
அந்த 9 தொகுதிகளில், ம.இ.கா. 4 தொகுதிகளை வென்றது – சுப்ரமணியம் (சிகாமாட்), எம்.சரவணன் (தாப்பா) , பி.கமலநாதன் (உலு சிலாங்கூர்) மற்றும் ஜி.பழநிவேலு (கேமரன் மலை). தற்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், பழநிவேலு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டார்.
சுகாதார அமைச்சருமான சுப்ரா, தொடர்ந்து 4-வது முறையாக (2004-ல் இருந்து) சிகாமாட் தொகுதியிலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எம்.சரவணனும் பி.கமலநாதனும் தற்போதைய இடங்களிலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
“சுங்கை சிப்புட்டில், ம.இ.கா.-வின் தலைமைச் செயலாளர் எ.சக்திவேலு போட்டியிடும் சாத்தியம் உள்ளது. கடந்த தேர்தலில், அவர் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால், பிகேஆர் வேட்பாளர் ஜி.மணிவண்ணனிடம் தோல்வியைத் தழுவினார்,” என அவர் தொடர்ந்து கூறினார்.
காப்பார் தொகுதி துணைத் தலைவர் தி.எம். செல்வத்தை, காப்பார் நாடாளுமன்றத்திலும் , முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவை சுபாங் நாடாளுமன்றத்திலும் நிற்கவைக்க ம.இ.கா. விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், கோத்தா ராஜாவின் வேட்பாளர் யார் என்று, இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
“சிலாங்கூர் இளைஞர் பிரிவு தலைவர் டி.கஜேந்திரன் அல்லது தொகுதி தலைவர் ஆர்.எஸ். மணியம் இருவரில் ஒருவருக்கு அங்கு போட்டியிடும் வாய்ப்புண்டு என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், இறுதி நேரத்தில் அத்தொகுதி அம்னோவிற்குக் கைமாறும் வாய்ப்பும் உள்ளது, காரணம், கோத்தா ராஜா தொகுதியில் இருக்கும் ஶ்ரீ அண்டாலஸ் சட்டமன்றத்தில் ம.இ.கா. போட்டியிடவுள்ளது,” என்றும் அவர் விளக்கப்படுத்தினார்.
ம.இ.கா. பிரச்சாரக் குழு தலைவர், வி.எஸ். மோகன் மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜா இருவரும் தெலுக் கெமாங் மற்றும் கேமரன் மலையில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
ம.இ.கா. துணைத் தலைவர் எஸ்.கே. தேவமணி, உதவித் தலைவர் டி.மோகன், பொருளாளர் எஸ். வேள்பாரி மற்றும் மகளிர் தலைவி எம்.மோகனா பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.
“காரணம், அவர்கள் அனைவருக்கும் ‘செனட்டர்’ ஆகும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது,” என்று அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்ததாகப் பெரித்தா டெய்லி கூறியுள்ளது.
பாம்பின் கால் பாம்பறியும் ! பிரதமர், நிச்சயமாக அவருக்கு “நிகரான” வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது உறுதி. இலட்சங்களை செலவிட்டு கோடிகளைக் குவிப்பதற்கு புறப்பட்டுவிட்டது குள்ளநரி கூட்டம் ! வளர்க உங்கள் மக்கள் தொண்டு…..?
உத்தம புத்திரர்களின் பட்டியல் தயார்
அவர்கள் வெற்றி பெரும் வேட்பாளர்களை மட்டும் தான் இந்த முறை நிறுத்துவோம் என்று பிரதமருக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறார்கள்! அதனால் யாரும் தோற்பதற்கு வாய்ப்பில்லை!
என்ன இரும்பு இதயம் உனக்கு சுப்பிரமணி !! எப்படி நாகூசாமல் வெட்ரி வேட்ப்பாளர்கள் என்று கூறுகிறாய் ! கடந்த தேர்தலில் தோத்தவனெல்லாம் வரும் தேர்தலில் ஜெயிப்பான் என்று நம்பும் உமக்கு தைரியத்தை பாராட்டுகிறோம் !! 4 வது முறையாக ஜெயித்தும் இந்த சமுதாயத்திற்கு எதுவும் உம்மால் செய்ய முடியாது ! இன்னும் தானை தலைவனுக்கும் ! அம்னோ தலைவனுக்கும் அடி வருடிகள் தானே நீயும் உன் அடி வருடிகளும் ! எந்த சுப்ரமணி என்ற குழப்பத்தில் ஜோஹோர் சுல்தானையும் குழப்பி கிடைத்ததுதானே உமக்கு ஜோஹோர் நாடாளுமன்ற தொகுதி ! ம .இ .கா . பாரம்பரிய தொகுதிதானே சுங்கை சிப்புட் ! எங்கள் கூட்டுறவு தந்தை ! கட்டி காத்த தொகுதியை உன் தானை தலைவனின் ஆணவத்தில் இழந்தது ம .இ. கா . தேசிய தலைவன் அங்கு போய் நிற்க வேண்டியதுதானே ! பயமா !! ம .இ. கா கரனெல்லாம் திருந்த வில்லை ! மக்கள் சேவை கருதி அரசியலுக்கு வரவில்லை என்றால் !! வரும் தேர்தலோடு ம .இ. கா .என்ற ஒரு கட்சி இந்தியர்களுக்கு இருந்ததாக சரித்திரம் இல்லாமல் போய்விடும் ! எவ்வளவு காலத்திற்கு செனட்டர் பதவியை நம்பிக்கொண்டிருப்பீர்கள் ! தேர்தலில் தோத்தவன் எல்லாம் செனட்டர் என்றால் உங்கள் அடியாட்களும் ,அடிவருடிகளும் தேர்தலில் நிற்க வேண்டியதில்லையே !!யோசி ! யோசி !! சுப்ரமணி ,யோசி !!