பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற்றால், பெட்ரோலுக்கான மானியங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவோம் என்ற பக்காத்தான் ஹராப்பானின் எண்ணம் ஏழைகளுக்கு உதவாது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பிகேஆர் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறையின் தலைவர் வோங் சென் வெளியிட்ட அறிக்கையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டில், ஏழைகளுக்கு எண்ணெய்க்கான மானியம் வழங்கப்படவில்லை என்றால் அது முறையல்ல என்று வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தைப் பற்றி, நேற்று நடந்த ஒரு முகநூல் நேரடி விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
“எண்ணெய் மானியங்கள் ஏழைகளுக்கு எவ்வளவு நன்மை அளிக்கும் என்பதை சில வழிகளில் நாங்கள் காண்கிறோம்”, என்று வோங் சென் தெரிவித்தார். “ஏழைகளுக்கு மானிய விலையில் எண்ணெய் வழங்க வேண்டியதன் தார்மீக பொறுப்பை நாங்கள் உணர்கிறோம்.”
எனினும், முன்னணி பொருளாதார நிபுணர் ஜோமோ குவாம் சுந்தரம் மற்றும் ‘டிஎம் அனலிட்டிக்ஸ்’ தலைமைப் பொருளாதார வல்லுனர் முகம்மது அப்துல் காலித் ஆகியோர், எரிபொருள் மானியங்கள் ஏழைகளுக்கு உதவுவாது என்று கூறியுள்ளனர்.
“தற்போதைய நெருக்கடியில், ஒரு பீப்பாய்க்கு 200 டாலர் செலவழித்தால் ஒழிய, எண்ணெய் மானியங்களை மீட்டெடுக்க வாய்ப்பில்லை”, என்று ஜோமோ கூறினார். “பெரும்பாலான எண்ணெய்யை அனுபவிப்பது நடுத்தர வர்க்கத்தினர் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.”
ஜொமோவின் கருத்துடன் முஹம்மதுவும் ஒத்துப்போகிறார்: “ஏழைகளைப் பற்றி பேசும்போது, அவர்கள் சைக்கிள் அல்லது பேருந்தில் பயணம் செய்கின்றனர். எண்ணெய்க்கான மானியம் பி.எம்.டபிள்யு.-வில் பயணம் செய்பவர்களுக்குத்தான் உதவும்.”
எண்ணெய்க்கான மானியங்கள் பிற்போக்குத்தனமானவை என முஹம்மத் விவரித்தார், மேலும், அது ஒரு தனிநபருக்கு மட்டுமே பயன் தருவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
” நீங்கள் ஏழைகளுக்கு உதவ விரும்பினால், அதற்கு இது வழியல்ல.”
“ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு மிகச் சிறந்த வழி, பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதே,” என்றும் ஜோமோ கூறினார்.
“இப்போது இது சுவாரசியமானது அல்ல. 1980-களில், தேசிய கார் வாங்க ஊக்குவிக்கப்பட்டதால், பொது போக்குவரத்து துறை பாதிக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில் அது சரி செய்யப்பட்டாலும், போதுமானதாக இல்லை.”
“மானியங்கள் தரவேண்டுமானால், அது பொதுப் போக்குவரத்துக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும்.”
பொதுத் போக்குவரத்து எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“பொது போக்குவரத்து புறக்கணிப்பை முதலில் சரி செய்ய வேண்டும்.”