கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தாம் கடந்த 17 ஆண்டுகளாக காத்திருப்பததாக மைபிபிபி தலைவர் எம். கேவியஸ் கூறுமிறார்.
2003 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைமறுநிர்ணயத்தின் போது உருவாக்கப்பட்ட அத்தொகுதி அவருக்குக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் இப்போது கூறிக்கொள்கிறார்.
அப்போது பிரதமராக இருந்த மகாதிர், என்னை அத்தொகுதியில் கவனம் செலுத்தும்படி 2000 ஆண்டிலேயே கேட்டுக் கொண்டார். ஆக, நான் அந்தத் தொகுதியில் 2000 ஆம் ஆண்டிலிருந்து உழைத்து வருகிறேன் என்றாரவர்.
நியாயப்படி, மற்றவரின் தொகுதியைக் கேட்பதற்கு மாறாக நான் அந்தத் தொகுதிக்குத் திரும்பிப் போக வேண்டும் என்று மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில் கேவியஸ் கூறினார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தாம் பிஎன் வேட்பாளராக கேமரன் மலையில் போட்டியிடத் தயாராக இருந்ததாக கூறிய கேவியஸ், அவர் விவரித்தபடி, மஇகா செய்த ஒரு “தகிடுதத்தத்தைத்” தொடர்ந்து, தாம் தைப்பிங்கிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
2004 இல் தைப்பிங் போட்டியில் வென்ற கேவியஸ், 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் தோல்வியுற்றார்.
2013 ஆம் ஆண்டில், கேமரன் மலைத் தொகுதியை தாம் கேட்டதாகவும், அப்போதைய மஇகா தலைவர் சரி என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
“நான் ஓகே என்றேன். உங்களுக்கு அந்தத் தொகுதி வேண்டுமென்றால், நான் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு காத்திருப்பேன். எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது, அந்தப் புரிந்துணர்வுடன், நான் 13 ஆவது பொதுத் தேர்தலில் எந்த நாடாளுமன்ற இருக்கையிலும் போட்டியிடவில்லை”, என்றார் கேவியஸ்.
நான் அந்தத் தொகுதியில் 2000 ஆம் ஆண்டிலிருந்து உழைத்து வருகிறேன் என்றாரவர்.—–
2000-ஆம் ஆண்டு முதல் இவர் மென்று தின்று போட்ட தக்காளிதான் இப்போது பெரிய பெரிய மரமாக அங்கே இருக்கின்றன. ஆகவே இந்த தொகுதியை இவருக்கு கொடுத்து பாருங்கள். விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்… மன்னிக்கவும் வென்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்.
கே வி சுப்ரமணியம், உமக்கு பொதுச்சேவை என்றால் என்னவென்று தெரியுமா ? இருப்பதையும் இழந்து, இல்லாமல் போனாலும் மேலும்மேலும் இழப்பதற்கு தயார்நிலையில் உள்ளவனே, பொதுச்சேவைக்குத் தகுதியுள்ளவனாகிறான். பொதுச்சேவை செய்யவேண்டுமென்று அரிப்பெடுத்து அலைவதெல்லாம் பணம் பண்ணுவதற்கே ! இன்றைய தேதியில் நாட்டின் முதல்நிலையிலிருந்து கடைநிலை ஊழியன்வரை, மக்களின் பணத்தைத் திருடுகிறான் ! நிலைமையை எடுத்துரைத்து நம் பங்கினை செய்வதே நம் தலையாய கடமையாகும். நல்லதை செய்து அனைவரும் நலமடைவோமாக.
ஒரு அப்படத்திற்கு போட்டிப்போட்ட இரு பூனைகளுக்கு நடுவராக இருந்த குரங்கு கதைபோல mic யும் MyPPP யும் இறுதியில் இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டு அவதியுற போகின்றன.